நம் உடலில் Tattoo குத்திக்கொள்ள சிறந்த இடம் எது?

Tattoo குத்திக்கொள்ளுதல் என்பது தற்போது நாகரீகமாகிவிட்டது. காரணம் இது உங்கள் தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுகிறது என நம்ப படுகிறது!

Last Updated : Aug 19, 2019, 12:40 PM IST
நம் உடலில் Tattoo குத்திக்கொள்ள சிறந்த இடம் எது? title=

Tattoo குத்திக்கொள்ளுதல் என்பது தற்போது நாகரீகமாகிவிட்டது. காரணம் இது உங்கள் தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுகிறது என நம்ப படுகிறது!

இந்நிலையில் பச்சை குத்திக்கொள்வதற்கு உங்கள் உடலின் ஒரு பகுதியை கூட உங்களால் தீர்மானிக்க முடியாவிட்டால்?.... அதற்கு உதவு தான் இந்த பதிவு. Tattoo குத்திக்கொள்வது சரியானது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் எந்த Tattoo-வினை எங்கு குத்தினால் நன்றாக இருக்கும் என பரிந்துரைக்க விரும்புகிறோம், அவ்வளவு தான்...

மணிக்கட்டில் உள்நோக்கி
மணிக்கட்டில் Tattoo குத்துவது மிகவும் சரியான ஒன்று., காரணம் மணிக்கட்டில் Tattoo குத்திக்கொள்வது மிகக் குறைந்த நேரத்தினையே எடுக்கும். மேலும் இது வலியையும் குறைக்கிறது. மணிக்கட்டில் பச்சை குத்துவதை கவனித்துக்கொள்வதும் மிகவும் எளிதானது. உங்களுக்கு புண்படுத்தாத Tattoo குத்த விரும்பினால், இங்கு குத்தலாம்.

கால் மணிக்கட்டு
இந்த உடல் பகுதியில் Anchor குத்துவது மிகவும் குறைவான வேதனை அளிக்கக் கூடியது. கால் மணிக்கட்டில் Tattoo குத்திக்கொள்வது நல்ல வடிவமைப்புகளுடன் மிகவும் நவநாகரீகமாக தெரியும். மேலும் கால் மணிக்கட்டில் Tattoo குத்திக்கொள்வது மிகவும் எளிதானது, எளிமையாக மறைக்க கூடியதும் கூட. பூட்ஸ் அல்லது செருப்பை அணிந்து இந்த Tattoo-வை நீங்கள் எளிதாக மறைக்கலாம்.

காது பகுதி
நீங்கள் அழகான மற்றும் சிறிய Tattoo-களை விரும்பினால், உங்கள் காது பகுதியில் குத்தலாம். இதற்கு உங்களுக்கு பெரிய வடிவமைப்புகள் ஏதும் தேவையில்லை. காது பகுதியில் Tattoo குத்திக்கொள்வது மற்ற பச்சை குத்தல்களை விட குறைந்த பணத்தில் முடிவடையும் என்பதால், மளிவான விலை Tattoo-வாக இது இருக்கும்.

காதுகளுக்கு பின்னால்
இந்த Tattoo-வை நீங்கள் பெறக்கூடிய மிகவும் நாகரீகமான Tattoo ஆகும். இந்த இடத்தில் வலி கணிசமானது. இந்த பகுதி தலைமுடிக்கு அருகில் இருப்பதால் நீங்கள் குத்தும் Tattoo மிகவும் நன்றாக இருக்கும். இந்த Tattoo குத்தலை உங்கள் கழுத்து வரை நீட்டிக்கலாம் என்பதால் பெரிய அளவு Tattoo வடிவமைப்புகளையும் பயன்படுத்தலாம்.

மேற்கை உள்பகுதி
உங்கள் கைகளின் உட்புறத்தில் Tattoo குத்தினால் அது உங்களை காயப்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை, காரணம் இந்த இடத்தில் கொழுப்பு செல்கள் இருப்பதால், செயல்பாட்டின் போது அதிக வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் பெரிய வடிவமைப்பிலான Tattoo பெற இந்த இடம் கச்சிதமாக இருக்கும்.

விரல்களில் 
இந்த Tattoo  உங்களை மிகவும் காயப்படுத்தும், எனினும் தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கிறது. இந்த அழகான Tattoo குத்த இந்த வலியை யாரும் தாங்க தயாராக இருக்க மாட்டார்களா என்ன?. இங்கு குத்தப்படும் Tattoo-க்கள் மிகவும் சிறியவையாக இருக்கும் என்பதால் அதிக நேரம் வேதனையை பொறுத்துக்கொள்ள தேவையில்லை.

கழுத்துக்கு அடியில்
கழுத்தின் கீழ் Tattoo குத்துவது இப்போதெல்லாம் மிகவும் நவநாகரீகமானதாகி விட்டது. இந்த Tattoo-வை உருவாக்குவது மிகவும் கடினம் என்றாலும், பெண்கள் தான் இந்த Tattoo-வை அதிகமாக குத்திக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த Tattoo குத்திக்கொண்ட பிறகு, உங்கள் தலைமுடியை நீங்கள் சரிவர பாதுகாக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Trending News