Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்

இந்திய சந்தையில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் டச் தனது புதிய ஹெய்லியோ எச் 100 மின்சார மிதிவண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 06:09 PM IST
  • டவுட்ச் நிறுவனம் தனது புதிய மின்சார சைக்கிளான ஹெய்லியோ எச் 100 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ. என்ற வேகத்தை எட்டும்.
  • இந்த சைக்கிளில் மூன்று வெவ்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும் title=

Heileo H100 Electric Cycle: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டவுட்ச் (Toutche) தனது புதிய மின்சார சைக்கிளான ஹெய்லியோ எச் 100 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், 60 முதல் 80 கிலோமீட்டர் தூரம் வரை ஓடக்கூடிய திறன் கொண்டது. மேலும் இது ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ. என்ற வேகத்தையும் எட்டும்.

ஹீலியோ எச் 100 எலக்ட்ரிக் சைக்கிள்

இந்திய சந்தையில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் டச் தனது புதிய தலைமுறை ஹெய்லியோ எச் 100 மின்சார மிதிவண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. தோற்றத்தில், இது ஒரு சாதாரண மிதிவண்டியைப் போல உள்ளது. ஆனால் பல அற்புதமான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மக்களுக்கு பிடிக்கும் வகையில் உள்ளன.

பெடலிங் செய்யாமல் 80 கி.மீ வரை செல்லும் 

நிறுவனம் கூறுகையில், இந்த மின்சார மிதிவண்டியில் (Electric Cycle) லி-அயன் பேட்டரி மற்றும் 250 வாட் பின்புற ஹப் மோட்டார் உள்ளது என கூறியது. இதன் உதவியுடன் இந்த சைக்கிளை 60 முதல் 80 கிலோமீட்டர் தூரம் பெடல் செய்யாமல் செலுத்த முடியும். அதே நேரத்தில், பேட்டரி தீர்ந்துவிட்டால், பெடல் செய்தும் செலுத்த முடியும்.

ALSO READ: Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility 

இந்த சைக்கிள் 25 KMPH வேகத்தில் செல்லும்

துவக்க நிலையில், ஹீலியோ எச் 100 மின்சார சைகிளை ஸ்பிரிங் கிரீன் மற்றும் வைட் என்ற இரண்டு வண்ணங்களில் நிறுவனம் கிடைக்கச் செய்துள்ளது. இதன் ஃப்ரேமின் அளவு 19 அங்குலங்கள் ஆகும். இதன் காரணமாக இந்த சைக்கிளை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் (Cycle Speed)இயக்க முடியும்.

மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன

இந்த சைக்கிளில் மூன்று வெவ்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் இதை ஒரு சாதாரண சைக்கிளைப் போல ஓட்டலாம், அல்லது ஹேண்டில்பாரில் வழங்கப்பட்ட த்ரோட்டலைப் பயன்படுத்தி மின்சார பைக்கைப் போல ஓட்டலாம். மின்சார பயன்முறையில் பெடலின் உதவியின் உதவியுடன், நீங்கள் இதன் செயல்திறனை இன்னும் அதிகரிக்கலாம். சைக்கிளின் இடது கைப்பிடியில் த்ரோட்டில் (முடுக்கி) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சைகிளின் விலை என்ன 

அலுமினிய ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளை நிறுவனம் 48,900 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ .2,334-க்கான  இ.எம்.ஐ வசதியும் வழங்கப்படுகிறது.

ALSO READ:Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News