தினமும் 1 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ‘மேஜிக்’ நன்மைகள் நடக்கும்!

Benefits of Eating Dates in Empty Stomach: பேரிச்சம்பழத்தில் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2024, 05:10 PM IST
  • பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
  • இதனால் மூல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
  • கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை பயக்கும்.
தினமும் 1 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ‘மேஜிக்’ நன்மைகள் நடக்கும்! title=

பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கையான சத்துக்கள் பல நிறைந்துள்ளன. தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு விரைவான ஆற்றலும் ஊக்கமும் கிடைக்கும். இதனால் செரிமான கோளாறுகளும் சரியாகும். மேலும் இது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. 

தினம் ஒரு பேரிச்சம்பழம்!

தினமும் ஒரு பேரிச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல மேஜிக் நன்மைகள் நடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? பேரிச்சம்பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அவை உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் வலு கொடுக்கின்றன. மேலும் இதில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட இயற்கை சர்க்கரைகளும் உள்ளடக்கமாக உள்ளது.  இந்த சத்துக்கள் உடலுக்கு விரைந்து ஆற்றல் அளிக்கின்றன. இதில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் செரிமானத்தை எளிதாக்குகிறது

இவை மட்டுமன்றி, பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் B6 போன்ற முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, இவை அனைத்தும் பொதுவான உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. ஒரு பேரிச்சம்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாமா? 

எலும்புகள் வலுபெறும்:

உடலில் மேக்னீசியம், காப்பர் சத்துக்கள், மாக்னீசிய மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்க, பேரிச்சம்பழம் சிறந்த தேர்வாக இருக்கும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஒரு பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால் எலும்புகளை பாதுகாத்து வலு பெற செய்யலாம் எனவும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோராசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது:

தினமும் காலையில் ஒரு பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால், மூளையை தாக்கும் நோய்  பாதிப்புகளான நியூரோடிஜெனரேட்டிவ் போன்ற நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இதனால் மூளையின் அறிவாற்றல் செயல்பாடும் அதிகரிக்கும் என்றும் சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிகின்றன. குறிப்பாக வயதானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்குமாம். 

மேலும் படிக்க | Pomegranate Benefits: தினமும் காலையில் மாதுளை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும்:

பொதுவாக, கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களின் உடல் நிலையை பொறுத்து அதிக கலோரிகள் கொண்ட உணவுகளும், குறைவான நார்ச்சத்து கொண்ட உணவுகளும் வழங்கப்படுகிறது. கருவுற்று இருப்பவர்களுக்கு, ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்ட கலோரிகள் வழங்கப்பட வேண்டும் என குழந்தைப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பேறு காலத்தில் மூல நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். குழந்தையை பெற்றெடுக்கும் சில வாரங்களுக்கு முன்பிருந்து பேரிச்சம்பழத்தினை எடுத்துக்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்குமாம். 
மூல நோய் பாதிப்புகளில் இருந்து விடுதலை:

தினம் ஒரு பேரிச்சம்பழத்தை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், மூல நோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உள்ள மினரல் சத்துக்கள், செரிமானத்தை எளிதாக்குகின்றன. இதனால், சாப்பிடும் உணவுகளும் விரைவில் செரிமானம் அடைகின்றன. 

உடல் எடை அதிகரிப்பு:

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக அவர்களின் டயட்டில் பேரிச்சம்பழத்தை எடுத்துக்கொள்ளலாமாம். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் பேரிச்சம்பழம் சாப்பிடுபவர்கள் 30 சதவிகிதம் உடல் எடையை அதிகரிப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், இது ஒவ்வொருவரின் உடலை பொறுத்து வேறு படும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரத்த சக்கரை அளவு:

பேரீச்சம்பழத்தில் அதிகம் உள்ள பொட்டாசியம், சிறுநீரக கற்களைத் தவிர்க்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது, நம் உடலில் உள்ள சோடியத்தின் விளைவுகளை சமநிலைப்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதால் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம் என மருத்துவர்களால் சான்றளிக்கப்படுகிறது. பேரிச்சம்பழத்தில் மெக்னீசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதயம் மற்றும் இரத்த நாள தசைகளை தளர்த்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

மேலும் படிக்க | சீக்கிரமா தூங்கி, விடியக்காலையிலேயே எழுந்திருப்பவரா? எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News