இனி கடற்கரையில் பீர் குடித்தால் அபராதம் -கோவா முதல்வர் அதிரடி!

பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் என கோவா முதலவர்  மனோகர் பாரிக்கர் அறிவிப்பு!!

Last Updated : Jul 17, 2018, 01:33 PM IST
இனி கடற்கரையில் பீர் குடித்தால் அபராதம் -கோவா முதல்வர் அதிரடி! title=

பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் என கோவா முதலவர்  மனோகர் பாரிக்கர் அறிவிப்பு!!

கோடை காலம் என்றாலும் மழைகாலம் என்றாலும் மக்கள் விடுமுறை என்றாலே சுற்றுலாவிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் கோவா செல்வார்கள். கோவாவில், எப்போதும் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். 

கோவா என்றாலே கடற்கரை, குடி, குத்தாட்டம் என்றுதான் பலரின் மனநிலை. தற்போது, கோவா முதலவர் கோவா மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிர்ணயித்து வருகிறார். இதையடுத்து, பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் என புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.     

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பேசியபோது; பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இனி யாராவது மது அருந்தினால் அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

Trending News