ஆயிரக்கணக்கில் செலவழிக்க தேவையில்லை... வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்ளலாம்

ஃபேஷியலின் போது முகத்தில் கொடுக்கப்படும் மசாஜ், சருமத்தை பளபளப்பாகவும் ஆக்குவதோடு, சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் , தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 2, 2024, 10:59 AM IST
  • வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி?
  • ஃபேஷியலின் அடுத்த கட்டம் முகத்தை ஸ்டீமிங் செய்வதாகும்.
  • ஸ்டீமிங் செய்த பிறகு, முகம் ஸ்க்ரப்பிங் செய்யப்படுகிறது.
ஆயிரக்கணக்கில் செலவழிக்க தேவையில்லை... வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்ளலாம் title=

வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி: பலர் இளைமையை பாதுகாக்க மாதம் ஒரு முறையாக பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்து கொள்வார்கள். ஃபேஷியலின் போது முகத்தில் கொடுக்கப்படும் மசாஜ், சருமத்தை பளபளப்பாகவும் ஆக்குவதோடு, சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் , தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. ஆனால், விலையுயர்ந்த பார்லர் பியூட்டி ட்ரீட்மென்ட்கள் காரணமாக, நீங்கள் ஃபேஷியல் செய்வதைத் தவிர்த்தால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

ஆம், உங்கள் முகத்தின் பொலிவைத் தக்கவைக்க நீங்கள் பார்லருக்குச் சென்று பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே கூட விலையுயர்ந்த கோல்ட் ஃபேஷியல் செய்யலாம். அதுமட்டுமின்றி, இந்த ஃபேஷியலின் சிறப்பு என்னவென்றால், சமையலறையில் இருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டே இதனை செய்யலாம். இதன் காரணமாக ஒவ்வாமை அல்லது சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படும் என்கிற கலவையும் கிடையாது. எனவே தாமதிக்காமல், வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்வது எப்படி (Beauty Tips) என்பதை தெரிந்து கொள்வோம்.

வீட்டிலேயே  ஃபேஷியல் செய்து கொள்ளும் முறை:

முகத்தை சுத்தப்படுத்துதல்

கோல்ட் ஃபேஷியல் என்பது முகத்தை சுத்தம் செய்வதோடு தொடங்குகிறது. இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் பச்சைப் பாலை எடுத்து அதில் ஒரு பருத்தியை நனைக்கவும். இப்போது அதை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதிலும் தடவி 1 நிமிடம் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு, ஈரமான கைக்குட்டையால் முகத்தைத் துடைக்கவும்.

ஸ்டீமிங்  மூலம் சுத்தம் செய்தல்

சுத்தப்படுத்திய பிறகு, ஃபேஷியலின் அடுத்த கட்டம் முகத்தை ஸ்டீமிங் செய்வதாகும். இதற்கு, ஷவர் கேப் மூலம் தலைமுடியை மூடி, முகத்திற்கு 2 நிமிடம் ஸ்டீமிங் கொடுப்பதன் மூலம், முகத் துளைகள் திறக்கப்படும். இதற்குப் பிறகு, முகம் மற்றும் கழுத்தை ஒரு துணியால் துடைத்து, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்க சுத்தம் செய்யவும்.

முக ஸ்க்ரப்பிங்:

ஸ்டீமிங் செய்த பிறகு, முகம் ஸ்க்ரப்பிங் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டீஸ்பூன் தேன் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இப்போது தயாரிக்கப்பட்ட இந்த ஸ்க்ரப் மூலம் முகத்தை 2 நிமிடங்களுக்கு மெதுவாக தேய்க்கவும். அதன் பிறகு, முகத்தை வெற்று நீரில் கழுவவும்.

மேலும் படிக்க | முகப்பரு முதல் சுருக்கங்கள் வரை... சரும அழகை பராமரிக்க உதவும் ரோஸ் வாட்டர்..!!

முக மசாஜ் 

முகத்தை மசாஜ் கோல்ட் ஃபேஷியலின் மிக முக்கியமான ஒன்றாகும். ஃபேஸ் மசாஜ் க்ரீம் தயாரிக்க, முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். 10 நிமிடங்களுக்கு இந்த கிரீம் மூலம் உங்கள் முகத்தை மசாஜ் செய்த பிறகு, மென்மையான துண்டால் முகத்தை துடைக்கவும்.

மாஸ்க்

முகத்தில் போடப்படும் இந்த மாஸ்க் மிகவும் முக்கியமானது. இதன் உதவியுடன் உங்கள் முகத்தில் திறந்த துளைகளை மூடலாம். ஃபேஸ் மாஸ்க் செய்ய, ஒரு பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் மஞ்சள், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். இப்போது இந்த தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும். இதற்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவவும். உங்கள் சருமம் ஏற்கனவே எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், மாஸ்க் தயாரிக்க தேனைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முக கிரீம்

கோல்ட் ஃபேஷியலின் முடிவில் முகத்திற்கு கிரீம் தடவுவது முக்கிய. 10 நிமிடங்களுக்கு முகத்தில் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் தடவ வேண்டும். அதன் பிறகு ஒரு காட்டன் பந்தால் முகத்தை சுத்தம் செய்யவும்.

மேலும் படிக்க | நரைமுடி முதல் பொடுகு பிரச்சனை வரை... வேப்பிலை கலந்த எண்ணெய் செய்யும் மாயங்கள்..!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News