புடவைக்கு ‘இந்த’ ஹேர்ஸ்டைல்ஸ் சூப்பரா இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க..

Hair Style Tips For Saree Wear : பலருக்கு புடவை கட்ட பிடிக்கும். ஆனால் அந்த புடவைக்கு என்ன ஹேர்ஸ்டைல் பாேட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 3, 2024, 04:40 PM IST
  • புடவைக்கு என்ன ஹேர்ஸ்டைல் போடலாம்?
  • அனைத்துமே ஈசியானவைதான்..!
  • இங்கு அதற்கான டிப்ஸ்..
புடவைக்கு ‘இந்த’ ஹேர்ஸ்டைல்ஸ் சூப்பரா இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க.. title=

Hair Style Tips For Saree Wear : இந்திய பெண்களுக்கு பிடித்த ஆடைகள் பல இருக்கலாம். என்னதான் வெஸ்டர்ன் உடைகளில் ஜம்மென்று வெளியில் சென்று கலக்கினாலும், ஏதாவது விஷேஷ நாட்களில் புடவை கட்டி வெளியில் செல்லும் பாேது வரும் வெட்கத்திற்கு அளவே இல்லை. 

தென்னிந்தியாவாகட்டும், வட இந்தியாவாகட்டும், எங்கு எடுத்துக்கொண்டாலும் புடவை அணியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். தமிழ் பெண்கள் புடவை அணியும் போது, முந்தாணை, இடது புற தோள்பட்டையில் இருக்கும் படி புடவை கட்டுவர். வட இந்தியாவில் இதற்கு அப்படியே நேர்மாறாக கட்டுவர். அவர்களுக்கு, முந்தாணை வலப்புற தோள்பட்டையில் இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை, மடிசார், கச்சிவர்கள், தாவணி, பெரிய முந்தாணை வைத்த நிவி வகை புடவை கட்டுதல் என பல வகைகள் இருக்கின்றன. வட இந்தியாவை பொறுத்தவரை, நிவி ஸ்டைல், குஜராத்தி ஸ்டைல், ராஜஸ்தானி ஸ்டைல், மஹாராஸ்டிரா  ஸ்டைல், காச் ஸ்டைல் என பல்வேறு வகைகள் இருக்கின்றன. 

சரி, ஏதோ ஒரு வகையில் புடவை கட்டி விட்டீர்கள், இதற்கு எந்த மாதிரியான சிகை அலங்காரத்தை செய்யலாம்? இதோ அதற்கான டிப்ஸை பார்க்கலாம்.

1.பன் கொண்டை:

அனைத்து வகை உடைகளுக்கும் பொருந்தி போகும் ஒரு சிகை அலங்காரம், பன் கொண்டை.  எந்த கால உடை அணிந்தாலும், எந்த வகையான புடவை அணிந்திருந்தாலும் அதற்கு இந்த பன் கொண்டையை போட்டுக்கொள்ளலாம். இதனுடன், அந்த கொண்டையை சுற்றி மல்லிப்பூ மற்றும் ரோஜாவை வைத்தால், அந்த உலக அழகியே நீங்கதான் போங்க..

2.சைட் பன்:

மேற்கூறிய அதே பன் கொண்டையை, அப்படியே கொஞ்சம் சைடில் போட்டால், சைட் பன் ஹேர் ஸ்டைல். இது பார்ப்பதற்கு ட்ரெண்டி ஆகவும், ஸ்டைலாகவும் இருப்பதோடு, புடவைக்கும் எடுப்பாக இருக்கும்.

3.லூஸ் வேவ்ஸ்:

தலையில், நேர் வகுடு அல்லது சைட் வகுடு எடுத்து சிம்பிளாக ஒரு க்ளிப் குத்தி அப்படியே லூஸ் ஹேர் விடுவதற்கு பெயர்தான், லூஸ் வேவ்ஸ் ஹேர்ஸ்டைல். இது, பார்ப்பதற்கு மென்மையான அழகுடன் இருப்பதோடு, உங்கள் முந்தானையின் நுனி தவழ்ந்து ஓடுவது போல, இதுவும் உங்கள் தோள்பட்டையில் தவழ்ந்து ஓடும். 

மேலும் படிக்க | தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

Hair Style TIps

4.பின்னல் பன்:

தலையில், பின்னல் போட்டு அதை பன் கொண்டையாக போடுவதும் ஒரு வித அழகாகும். அப்படியே, உங்கள் முன் தலையில் கொஞ்சம் முடியை ஸ்டைலாக எடுத்து காதருகே விட வேண்டும். அவ்வளவுதான்..

5.பாதி முடியில் ஹேர்ஸ்டைல்:

இந்த ஹேர்ஸ்டைலை, நீங்கள் புடவைக்கு மட்டுமல்ல, எந்த ட்ரெடிஷனல் உடை அணிந்தாலும் போட்டுக்கொள்ளலாம். இதில், உங்கள் மேல் தலையில் இருக்கும் பாதி முடியை மட்டும் டெக்கரேட் செய்ய வேண்டும். மீதி முடியை அப்படியே தோள்பட்டையில் விட்டுவிட வேண்டும். அலங்கரிக்க வேண்டிய அந்த பாதி முடியை நீங்கள் கர்லிங் செய்தோ, செயற்கை பூக்களை வைத்தோ அலங்கரித்து கொள்ளலாம். மீதி முடியை கர்லிங் செய்வதும், அப்படியே விடுவதும் உங்கள் விருப்பம். 

6.பின்னல்:

பின்னல்களில் பல வகைகள் உள்ளன. இதில், புடவைக்கு ஏற்ற சில பின்னல் வகைகளும் இருக்கின்றன. சைடாக கோடு எடுத்து, பின்னலை உங்களுக்கு எந்த பக்கம் வாட்டமோ அந்த பக்கமாக ஒன் சைடாக போட்டுக்கொள்ளலாம். பின்னல் லூஸாகவும், வெளியில் வராத வகையிலும் இருந்தால், பார்க்க நன்றாக இருக்கும். அதே போல, ஜவுரி முடி வைத்து உங்கள் பின்னலை அடர்த்தியாக வைத்து ஒவ்வொரு பின்னல் இடுக்கிலும் செயற்கை பூ அல்லது சுட்டி வைக்கலாம். 

மேலும் படிக்க | புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News