வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

Bank Holidays in August 2023: ஆகஸ்ட் மாதம் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனி உட்பட 14 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2023, 12:37 PM IST
  • ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளின் பட்டியல்.
  • கடந்த ஜூலை 2023 இல், வங்கிகளுக்கு ஒட்டுமொத்தமாக 15 நாட்கள் விடுமுறை இருந்தது.
  • ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! title=

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகள்: ஆகஸ்ட்  மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.  ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.   சுதந்திர தினம், திருவோணம், பார்சி புத்தாண்டு என  ஆகஸ்ட் 2023 இல் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும். மாதத்தில் வங்கிகளுக்குச் செல்லத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் நாட்களைத் திட்டமிட வேண்டும். ஆக்ஸ்ட் மாத விடுமுறை நாட்களில் எட்டு மாநிலங்களுக்கான குறிப்பிட்ட விடுமுறைகளும் அடங்கும். அதாவது இந்தியா முழுவதிலும் அல்லாமல், குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும், பண்டிகை அல்லது திருவிழாவிற்கான விடுமுறை வழங்கப்படும். 

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளின் பட்டியல்.

ஆகஸ்ட் 8: டெண்டாங் லோ ரம் ஃபாட் (கேங்டாக்கில் வங்கி இல்லை)

ஆகஸ்ட் 12: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 13: மாதத்தின் இரண்டாவது ஞாயிறு

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் - தெலுங்கானா, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் சுதந்திர தினத்திற்காக)

மேலும் படிக்க | அசந்து போன அரசு ஊழியர்கள்... மீண்டும் அமலாகிறது பழைய ஓய்வூதிய திட்டம்...?

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 18: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (கௌஹாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 20: மூன்றாவது ஞாயிறு

ஆகஸ்ட் 26: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 27: மாதத்தின் நான்காவது ஞாயிறு

ஆகஸ்ட் 28: முதல் ஓணம் (கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 29: திருவோணம் (கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 30: ரக்ஷா பந்தன் (ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 31: ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல் (ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல் காரணமாக காங்டாக், டேராடூன், கான்பூர், கொச்சி, லக்னோ மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ரிசர்வ் வங்கியின்,  நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டத்தின் கீழ் வங்கி விடுமுறைகள் விடுமுறையாகக் குறிக்கப்படுகின்றன. வங்கிக் கிளைகள், கணக்குத் திறப்பு, ரொக்கப் பணம் செலுத்துதல், பணம் திரும்பப் பெறுதல், காசோலைப் புத்தக விண்ணப்பம், காசோலை வழங்குதல், நிலையான வைப்புகளை மூடுதல் மற்றும் திறத்தல், பாதுகாப்பு வைப்பு லாக்கர்கள், டிமாண்ட் டிராஃப்ட்கள், கடன் விண்ணப்பங்கள் மற்றும் மூடல் சேவைகளை வழங்குகின்றன. கடந்த 2023 ஜூலை  மாதத்தில், வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக 15 நாட்கள் விடுமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரமத்தை தவிர்க்க மேலே கூறப்பட்டுள்ள நாட்களில் நீங்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டாம்.  இந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஏடிஎம்கள், பண டெபாசிட், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.வங்கி விடுமுறைகள் குறித்து முதலிலேயே அறிந்து கொள்வது, நமது பணியை திட்டமிட வசதியாக இருக்கும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News