Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

Bank Holidays december 2022: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின் படி, இந்த விடுமுறைகளில் பல தேசிய விடுமுறைகள், சில உள்ளூர் விடுமுறைகள் இடம்பெற்றுள்ள.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 1, 2022, 09:05 AM IST
  • வங்கி விடுமுறை 2022 தமிழ்நாடு பட்டியல்.
  • டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை.
  • இந்தியாவில் உள்ள வங்கி விடுமுறைகளின் பட்டியல்.
Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை title=

ஆண்டின் கடைசி மாதம், அதாவது டிசம்பர் மாதம் இன்று முதல் தொடங்கியுள்ளது. டிசம்பர் 2022 இல், வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது (வங்கி விடுமுறை பட்டியல் டிசம்பர் 2022). அதன்படி டிசம்பர் மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன, இந்த நாளில் வங்கிக்கு வாராந்திர விடுமுறையும் உள் அடங்கும், அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதுதவிர சில பண்டிகைகள், விசேஷ தினங்களிலும் வங்கிகளில் இயங்காது. எனவே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி கூறப்பட்டிருப்பதாவது.,

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலண்டர் ஆண்டிற்கும் வங்கி விடுமுறைகளின் பட்டியலைத் தயாரிக்கிறது. அதன்படி நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பரில் 14 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் இணைய வங்கி சேவை, யுபிஐ சேவை,கார்டு பயன்பாடு என பல சேவைகள் இருந்தாலும், வங்கிகளுக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நிலையில், அதனை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம்.

மேலும் படிக்க | LPG Gas Cylinder Price: கேஸ் சிலிண்டர் விலை....அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

எந்தெந்த தினங்களில் விடுமுறை? டிசம்பர் 2022ல் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் 

டிசம்பர் 3 - சனிக்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா- கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை டிசம்பர் 5 - திங்கட்கிழமை - குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் 2022- தேர்தல் காரணமாக குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை 
டிசம்பர் 12 -திங்கட்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா- மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை டிசம்பர் 19 - திங்கட்கிழமை - கோவா விடுதலை நாள்- கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை 
டிசம்பர் 24 - சனிக்கிழமை - கிறிஸ்துமஸ் பண்டிகை: மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை 
டிசம்பர் 26 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நம்சூங் - மிசோரம், சிக்கிம் மற்றும் மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை 
டிசம்பர் 29 - வியாழன் - குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் - சண்டிகரில் வங்கிகளுக்கு விடுமுறை 
டிசம்பர் 30 - வெள்ளிக்கிழமை - யு கியாங் நங்பா (U Kiang Nangbah) - மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை 
டிசம்பர் 31 - சனிக்கிழமை - நியூ இயர்ஸ் ஈவ் - மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை

வார விடுமுறை நாட்களின் விவரம்
டிசம்பர் 4 - ஞாயிற்று கிழமை 
டிசம்பர் 10 - இரண்டாவது சனிக்கிழமை 
டிசம்பர் 11 -ஞாயிற்று கிழமை 
டிசம்பர் 18 - ஞாயிற்று கிழமை 
டிசம்பர் 24 - நான்காவது சனிக்கிழமை 
டிசம்பர் 25 - ஞாயிற்று கிழமை

மேலும் படிக்க | டிசம்பர் 1: இன்று முதல் உங்கள் பட்ஜெட்டில் கூடுதல் செலவு கொடுக்கும் விஷயங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News