சனிப்பெயர்ச்சி 2022: ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமையன்று சனி பகவான் தனது ராசியை மாற்றி கும்ப ராசிக்குள் நுழைய உள்ளார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும்போது, சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் ஏற்படும்.
சனி பகவானின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவும் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இரண்டு ராசிக்காரர்கள் மீது சனி தசையின் தாக்கமும், ஒரு ராசியின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் இருக்கும். சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரகளுக்கு மோசமான விளைவுகள் ஏர்படும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மோசமான விளைவை ஏற்படுத்தும்
மேஷம்:
ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். சனிபகவான் ராசி மாறியவுடன் மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த வேளையில் அவர்களுக்கு சட்ட சிக்கல்கள் எற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடன் சுமை அதிகரிக்கலாம். எனவே, இந்த நேரத்தில் பொறுமையுடனும் நிதானத்துடனும் பணியாற்றுவது அவசியம்.
சிம்மம்:
இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் தடைகள் வரலாம். சனியால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், கோபத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர் கெட்டுவிடும். இலக்கை அடைவதில் பல சவால்களை சனி உருவாக்குவார். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் பல பிரச்சனைகள் உருவாகலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்திலும் குழப்பங்கள் ஏற்படலாம். பொதுவாக இந்த காலத்தில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குழந்தையின் ஆரோக்கியம் முதலியவற்றில் கொஞ்சம் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இதுமட்டுமின்றி கல்வியோடு தொடர்புடையவர்களும் சிரமங்களையும் தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். நிதி விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம். உணவு மற்றும் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
மேலும் படிக்க | மற்றவர்களது மகிழ்ச்சி, வெற்றியை பார்த்து பொறாமைப்படும் ராசிகள் இவைதான்
சனி மகாதசையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரங்கள்
சனிபகவானின் அருளைப் பெற, இந்த செயல்கள் பலனளிக்கின்றன. சனியின் தீய விளைவுகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.
- சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கடுகு எண்ணெயை சமர்பிக்கவும்.
- கோடை காலத்தில் கருப்பு குடை தானம் செய்வது நல்லது.
- ஏழை மற்றும் கடின உழைப்பாளிகளை மதிக்கவும்.
- காலணிகளை தானம் செய்யுங்கள்.
- ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
- சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோயில்களில் எள் தீபம் ஏற்றி வைத்து சனீஸ்வரனை வழிபடலாம்.
- தானம், தருமம் செய்யும்போது பெறுபவரை மரியாதையுடன் நடத்த வேண்டும்
சனிதசையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான மந்திரங்கள்:
- ‘ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரவும் சஹ சனீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- கோளறு பதிகம் படிக்கலாம்.
- ஹனுமான் சாலீசா படிக்கலாம்.
- விநாயகர் அகவல், கந்தர் சஷ்டி கவசம் ஆகியவற்றை படிப்பது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Akshaya Tritiya 2022: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR