இனி கிரெடிட் கார்டில் நம்பர்கள் இருக்காது! பிறகு எப்படி பயன்படுத்துவது?

Axis Bank-Fibe: ஆக்சிஸ் வங்கி இந்தியாவின் முதல் எண்கள் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துகிறது, இதன் புதிய அம்சங்கள் மற்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.   

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2023, 06:54 AM IST
  • ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
  • பயனர்களுக்கு பல பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது.
  • மேலும் பலவித ஆபர்களையும் இந்த கார்டு வழங்குகிறது.
இனி கிரெடிட் கார்டில் நம்பர்கள் இருக்காது! பிறகு எப்படி பயன்படுத்துவது? title=

ஆக்சிஸ் வங்கியானது ஃபைப் (Fibe) உடன் இணைந்து, இந்தியாவில் எண்கள் இல்லாத தனது முதல் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதுமையான கார்டு தொழில்நுட்பம் அனைவரையும் நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் என்றும் மற்றும் ஏற்கனவே உள்ள கார்டுகளிலிருந்து தனித்து நிற்கும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ஃபைப் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.  இந்த கார்டின் தனித்துவத்தன்மை அதன் எண்கள் அற்ற வடிவமைப்பு ஆகும். இந்த கிரெடிட் கார்டு அதன் எண், காலாவதி தேதி அல்லது சிவிவி எண் ஆகியவற்றை ஃபிசிக்கல் கார்டில் காட்டாது. இது கார்டுகளை பயன்படுத்துவோரின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறது, மேலும் மோசடி மற்றும் திருட்டு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. கார்டில் எந்த ஒரு தகவலும் இல்லாமல், உங்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க செய்ய வேண்டியவை... முழு விபரம் இதோ!

ஆக்சிஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபைப் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை ஃபைப் ஆப் மூலம் எளிதாக நிர்வகிக்கலாம், இது அவர்களின் கார்டின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்த புதிய கிரெடிட் கார்டுகள் பல அம்சங்களையும் வழங்குகின்றன.

  • அனைத்து உணவகங்களிலிருந்தும் ஆன்லைன் உணவு டெலிவரிகளுக்கு 3% கேஷ்பேக்.
  • ஓலா, ஊபர் போன்றவற்றில் 3% கேஷ்பேக்.
  • ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளுக்கு 3% கேஷ்பேக்.
  • அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கும் 1% கேஷ்பேக்.

மேலும் இந்த கிரெடிட் கார்டை ரூபே மூலம் UPI உடன் இணைக்க முடியும். tap-and-pay அம்சத்தையும் இந்த கார்டு வழங்குகிறது.  ஃபைப் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை பெறுவதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் எந்த வித கட்டணமும் இல்லை. கார்டுதாரர்கள் ஆண்டுதோறும் நான்கு உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான இலவச அணுகலை பெற முடியும் மற்றும் ரூ.400 முதல் ரூ.5,000 வரையில் பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது தள்ளுபடி கிடைக்கும். ஆக்சிஸ் பேங்க் அதன் கிரெடிட் கார்டுகளுக்கு எண்ட் ஆஃப் சீசன் சேல், ஷாப்பிங் தளங்கள், ஆன்லைன் ஆர்டர் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

கிரெடிட் கார்டுகளில் எண்கள் இல்லாதது உலகம் முழுவதும் ஒரு புதிய போக்காக மாறியுள்ளன. எண், CVV மற்றும் காலாவதி தேதி போன்ற கார்டு விவரங்கள் அச்சிடப்படாமல் இருப்பது, நீங்கள் கார்டை தொலைத்துவிட்டாலும், உங்கள் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. இருப்பினும், கார்டை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அதன் விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த புதிய முறை டிஜிட்டல் வாடிக்கையார்களை நிச்சயம் ஈர்க்கும்.  யுபிஐ பேமெண்ட்டுகளின் வசதியுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான பேமண்ட்டை பயனர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், இதன் மூலம் கிரெடிட் கார்டில் புதிய அம்சங்களை கொண்டு வருவோம்" என்று ஃபைபின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அக்ஷய் மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.

மேலும் படிக்க | NPS முதலீடு... கட்டுக்கதைகளும் விளக்கங்களும்... நிபுணர் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News