Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு புதன்கிழமைகள் பொக்கிஷமாக அமையும், வெற்றி கிடைக்கும்

சில ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை கூடுதல் சிறப்பாக அமைவதுண்டு. புதன் பொன்னாக பொலிவடையும் ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 06:00 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பொன்னான நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு புதன்கிழமைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள ஏற்ற நாளாக இருக்கும்.
  • மீன ராசிக்காரர்களுக்கு பொதுவாக புதன் கிழமைகள் வணிக ரீதியாக லாபகரமான நாளாக இருக்கும்.
Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு புதன்கிழமைகள் பொக்கிஷமாக அமையும், வெற்றி கிடைக்கும் title=

Horoscope November 17, 2021: பொதுவாக புதன் கிழமையன்று, அனைத்து ராசிக்காரர்களுக்கும் திறமையை வெளிக்காட்ட ஏராளமான வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. புதன்கிழமைகளின் செய்யப்படும் வேலைகளில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனினும், சில ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை கூடுதல் சிறப்பாக அமைவதுண்டு. புதன் பொன்னாக பொலிவடையும் ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பொன்னான நாள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அதிக பலன்களைத் தரும். நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் ஒரு புதிய கூட்டாண்மை அல்லது அமைப்பில் சேர ஏற்ற நாள் இன்று. உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும் மற்றும் சில முக்கியமான இணைப்புகளை நீங்கள் பெறுவீர்கள். உங்களின் புதுமையான யோசனைகள் மற்றும் பணிபுரியும் பாணி பாராட்டப்படும்.

கடகம் (Cancer): உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வணிகச் சூழலில் லட்சியத் திட்டங்களைத் தொடங்க கடக (Cancer) ராசிக்காரர்கள் புதன் கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் மேற்படிப்பு அல்லது வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கான நல்ல வாய்ப்பை இந்த நாட்களில் பெறுவீர்கள். புதன்கிழமைகளில் அதற்கான ஆயத்தங்களை செய்வது நல்லது. இன்று செல்வாக்கு மிக்க சிலரையும் சந்திப்பீர்கள்.

கன்னி (Virgo): இலக்கியம், கலை, எழுத்து, இசை, திரைப்படம் அல்லது விளையாட்டு போன்ற படைப்புத் துறைகளில் தொடர்புடைய கன்னி ராசிக்காரரகள், தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பொதுவாக புதன்கிழமைகளில் அதிகம் பெறுவார்கள். இன்று பல கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு உரித்தான புகழையும் பெறுவீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ:Astrology: உங்க மனைவிக்கு இந்த ராசியா? நீங்க பயங்கர அதிர்ஷ்டசாலி 

மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு புதன்கிழமைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள ஏற்ற நாளாக இருக்கும். பொதுவாக, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மகர ராசிக்காரர்களுக்கு இது சற்று இக்கட்டான காலம். எனினும், புதனின் ஆதிக்கத்தால், அனைத்து வித உடல் சங்கடங்களும் நீங்கி உடல் ஆரோக்கியம் விரைவில் ஏற்படும். நிதி நிலைகளை சரிசெய்து கொள்ள புதன் கிழமை மகர ராசிக்காரர்களுக்கு ஏற்ற நாளாக இருக்கும்.

மீனம் (Pisces): மீன ராசிக்காரர்களுக்கு பொதுவாக புதன் கிழமைகள் வணிக ரீதியாக லாபகரமான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கும் இது பல வெற்றிகளைத் தேடித்தரும் நாளாகும். மீன (Pisces) ராசிக்காரர்கள் பெரிய பணப் பரிவர்த்தனைகளை புதன் கிழமைகளில் வைத்துக்கொள்வது நல்லது. புதன்கிழமைகளில் திறமையை வெளிக்காட்ட பல நல்ல வாய்ப்புகள் கிட்டும். இதை மீன ராசிக்காரர்கள் பயன்படுத்திக்கொண்டால், புதிய உச்சங்களை எட்டலாம்.

ALSO READ:மிகவும் பிடிவாத குணம் கொண்டவர் இந்த 4 ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News