Astro: சாவல்களை கண்டு அஞ்சி ஓடும் ‘3’ ராசிக்காரர்கள்!

சிலர் கடினமான காலங்களில் மிகவும் தைரியமாக இருப்பார்கள். அதே சமயம் சிலர் சிறு பிரச்சனையைக் கண்டு அஞ்சி, ஓட நினைப்பார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2022, 02:42 PM IST
Astro: சாவல்களை கண்டு அஞ்சி ஓடும் ‘3’ ராசிக்காரர்கள்!  title=

கெட்ட காலங்களில் தான் ஒருவருக்கு அன்பும் ஆதரவும் வேண்டும். மோசமான காலங்களில் உங்களை ஆதரிப்பவர் தான் உங்களது உண்மையான நண்பர் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், எதிரில் இருப்பவரைப் பார்த்து கூச்சப்பட்டு, பழ விலகும் சிலர் இருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தில், சில குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் மிகவும் கூச்ச சுபாவம் மற்றும் அச்ச சுபாவம் கொண்டவர்கள் என கூறப்பட்டுள்ளது. எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை சந்திக்க தைரியல்ம் இல்லாமல்,  முதலில் ஓடுவார்கள். சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் மன உறுதி இவர்களுக்கு இல்லை.

சவாலை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத ராசிகள்:

கடகம்:

கடக ராசிக்காரர்கள் சண்டை, சச்சரவுகளில் சிக்கிக்கொள்வதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் நேர்மையான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.  எனவே அவர்கள் ஒருபோதும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அத்தகைய தவறை செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல், பிறர் விவகாரங்களில் ஈடுபடாமல்,  எந்த பிரச்சனையிலும் தலையிடாமல், தான் உண்டு தன்  வேலை உண்டு என இருப்பார்கள். சிக்கல் ஏதும் வரும் என்றால் ரகசியமாக அங்கிருந்து சென்று விடுகின்றனர். எனினும் இந்த நபர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

மேலும் படிக்க | புகுந்த வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு சேர்க்கும் ‘4’ ராசிப்பெண்கள்..!!!

கன்னி :

கன்னி ராசிக்காரர்களை கோழைகள் என்று அழைக்கலாம். பூச்சிகள், எலிகள், கரப்பான் பூச்சிகள், பல்லிகள் போன்ற உயிரினங்களுக்கும் கூட அவர்கள் மிகவும் பயப்படும் தனயுடன் இருப்பார்கள். அவர்கள் பதற்ற உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனிமையில் இருக்கும் போது அவர்கள் விரைவில் மனச்சோர்வடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: எதிலும் அலட்சியம் காட்டும் ‘5’ ராசிக்காரர்கள்

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். அதனால்தான் அவர்கள் தொல்லைகளிலிருந்து விலகி இருக்கிறார்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் குழப்பத்தில் சிக்குவதை நீங்கள் கண்டாலும், நமக்கு ஏதாவது அதனால பிரச்சனை வருமோ என உடனடியாக அவரை விட்டு விலகி இருங்கள். மற்றவர்களுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் அமைதியையும் தான் முக்கியம் என தன்னலம் ஒன்றே குறியாக இருப்பவர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News