#AskKamalHaasan: கமல்ஹாசன் புதிய டிவிட் பதிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Last Updated : Jun 28, 2018, 03:21 PM IST
#AskKamalHaasan: கமல்ஹாசன் புதிய டிவிட் பதிவு! title=

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

உங்களின் கேள்விகளை அவரிடம் கேட்கலாம், அதற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் விசில் செயலி மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 

"நான் இன்று வணக்கம் டிவிட்டர் நேரலையில் வர இருக்கிறேன். என்னிடம் கேட்க கேள்விகள் இருந்தால் என்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில் கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற ஹேஷ்டேக்கில் என்னிடம் கேட்கலாம். நான் அவற்றிற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். காத்திருங்கள்"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Trending News