ஆண்டின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த எல்பிஜி சிலிண்டர் விலை, இல்லத்தரசிகள் ஷாக்

Gas Cylinder Price Hike: புத்தாண்டின் முதல் நாளே கேஸ் சிலிண்டர் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. உங்கள் நகரத்தின் சமீபத்திய கட்டணங்கள் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 1, 2023, 09:03 AM IST
  • கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.
  • கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
  • இன்றைய எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை.
ஆண்டின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த எல்பிஜி சிலிண்டர் விலை, இல்லத்தரசிகள் ஷாக் title=

இன்றைய எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை: புத்தாண்டின் முதல் நாளே சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி உள்ளது. அதன்படி இன்று முதல் அதாவது ஜனவரி 1, 2023 முதல் கேஸ் சிலிண்டர்களின் விலைகள் (கேஸ் சிலிண்டர் விலை) உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, டெல்லி, மும்பை முதல் அனைத்து நகரங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்ந்துள்ளது. எனவே எந்த நகரத்தில் சிலிண்டரின் விலை என்ன என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் .

எந்த சிலிண்டரில் விலை உயர்ந்துள்ளது?
ஜனவரி 1, 2023 முதல், வணிக சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. அதே சமயம், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதாவது, வீட்டு சிலிண்டர்களுக்கு, கடந்த மாதம் செலவழித்த அதே தொகையை நீங்கள் இந்த மாதமும் செலவிட வேண்டியிருக்கும். அதே சமயம் இந்த மாதம் முதல் வர்த்தக சிலிண்டர்களுக்கு கூடுதலாக ரூ.25 செலுத்த வேண்டி வரும்.

மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு!

வணிக சிலிண்டர் விலைகள்-
>> டெல்லி - 1769
>> மும்பை - 1721
>> கொல்கத்தா - 1870
>> சென்னை - 1917

வீட்டு சிலிண்டர் விலைகள்-
>> டெல்லி - 1053
>> மும்பை - 1052.5
>> கொல்கத்தா - 1079
>> சென்னை - 1068.5

கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை 153.5 ரூபாய் உயர்ந்துள்ளது
வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் கடைசியாக கடந்த ஜூலை மாதம் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடந்த ஓராண்டில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.153.5 வரை உயர்த்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 80 கோடி மக்களுக்கு நற்செய்தி: 2023 முதல் இந்த பொருட்கள் இலவசமாக கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News