டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது!
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் பெரிய மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 2020 ஆம் ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஒரு வரலாற்று வெற்றியை எட்டியுள்ளது. டெல்லியின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 63 இடங்களில் ஏஏபி முன்னிலை வகிக்கிறது, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதே நேரத்தில், டெல்லி சட்டமன்றத்தை பாஜக மீண்டும் தோல்வி முகத்தை கண்டிருக்கிறது. டெல்லியில் 22 ஆண்டுகளாக அதிகார வறட்சியை எதிர்கொண்டுள்ள பாஜகவுக்கு, இந்த முறை ஒரு அதிசயம் நடக்கும் என நம்பிக்கை இருந்தது. ஏனெனில் கட்சி இந்த முறை பிரசாரத்தில் தேசிய பிரச்சினைகளை முக்கியமாக வைத்து ஓட்டு சேகரித்தது.
Mufflerman pic.twitter.com/OX6e8o3zay
— AAP (@AamAadmiParty) February 11, 2020
இந்நிலையில், டெல்லி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போல் வேடமிட்ட 2 வயது சிறுவனின் புகைப்படம் பகிரப்பட்டு, மஃப்லர்மேன் (Mufflerman) எனக் குறிப்பிடப்பட்டு ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, அந்த சிறுவனின் மேலும் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.
#DelhiElections2020: An Aam Aadmi Party (AAP) supporter reaches Delhi Chief Minister Arvind Kejriwal's residence with his children. Counting for all 70 assembly seats in Delhi to begin at 8 am. pic.twitter.com/jFG9M6VZ4W
— ANI (@ANI) February 11, 2020