ஸ்மார்ட் டிவி வகைகளில் தற்போது சந்தையில் கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு டிவிகள் பிரபலமாக இருந்து வருகின்றது. ஆண்ட்ராய்டு டிவி அறிமுகப்படுத்தப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது, இருப்பினும் தொடக்கத்தில் இந்த டிவி சிறப்பாக இயங்கவில்லை, அதன் பின்னர் கூகுளின் உதவியால் டிவி சிறப்பாக செயல்பட தொடங்கியது. இப்போது இந்த இரண்டு டிவிகளின் சிறப்பம்சங்களை பற்றி இங்கு காண்போம்.
ஆண்ட்ராய்டு டிவி:
ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஸ்ட்ரீமிங் ஸ்டிக்களால் பயன்படுத்தப்படும் ஒரு இயங்குதளம் தான் ஆண்ட்ராய்டு டிவி, இது ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் நீங்கள் செயலிகளை பயன்படுத்துவது போலவே இந்த டிவியிலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் டிவி போலல்லாமல், ஆண்ட்ராய்டு டிவி என்பது எந்த ஒரு திறந்த தளமாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு டிவிகள் 4கே ரிசல்யூஷனில் ட்விட்ச் மற்றும் யூடியூப் கேமிங் போன்ற சேவைகளிலிருந்து ஸ்ட்ரீம் செய்யும் திறனை கொண்டுள்ளாது. இந்த டிவிகளுக்கு நமது மொபைல்களையே ரிமோட்டாக பயன்படுத்தி கொள்ளலாம். பெரும்பாலான ஆண்ட்ராய்டு டிவிகள் ரிமோட் கண்ட்ரோல் அல்லது கேம் கன்ட்ரோலருடன் தொடர்புகொள்வதற்கு ஏற்றதாக உள்ளது. மேலும் இந்த டிவியில் நீங்கள் குரலை பயன்படுத்தி தேடலை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Samsung Galaxy M04: வெறும் ரூ.9,499-க்கு கிடைக்கும் ஒரு ஸ்டைலான அசத்தல் ஸ்மார்ட்போன்
கூகுள் டிவி:
கூகுளால் முதலில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி தான் கூகுள் டிவியாகும் மற்றும் இதன் ஓஎஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த டிவி ஆரம்பத்தில் நெட்ஃப்ளிக்ஸ் , ஹுலு ப்ளஸ், யூடியூப் மற்றும் பண்டோரா போன்ற பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கடந்த 2010ம் ஆண்டில் தான் கூகுள் டிவி அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. அதன் பிறகு 2011ம் ஆண்டில் நிறுவனம் கூகுள் "கூகுள் டிவி 2" என்ற அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை வெளியிட்டது. இதில் ஹெச்பிஓ கோ அல்லது இஎஸ்பிஎன்3 போன்ற முக்கிய பயன்பாடுகளை வழங்கியது. மேலும் இதில் ரிமோட் கண்ட்ரோல், குரலை பயன்படுத்தி தேடுவது ப்ளூடூத் இணைப்பு போன்ற பல அம்சங்களை வழங்கியது.
ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவி இடையே வேறு சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவிகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் இயக்க முறை தான். அதாவது ஆண்ட்ராய்டு டிவி ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் கூகுள் டிவி குரோம் ஓஎஸ்-ல் இயங்குகிறது. இரண்டு டிவிகளும் சிறப்பான யூடியூப் அம்சத்தை வழங்குகிறது. அதேசமயம் ஆண்ட்ராய்டு டிவியில் நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்த சேனலை மட்டுமே அணுக முடியும் மற்றும் கூகுள் டிவியில் அனைத்து சேனலையும் அணுகமுடியும்.
மேலும் படிக்க | மிகப்பெரிய தள்ளுபடியில் Realme GT Neo 3T! வெறும் ரூ.11,499-க்கு வாங்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ