நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்து, கார் வாங்கும் ஆசை உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பண்டிகை காலத்தில், மாருதி சுசுகி (Maruthi Suzuki) தனது வெவ்வேறு மாடல்களில் ரூ .11,000 வரை தள்ளுபடி சலுகையை கொண்டு வந்துள்ளது. பி.டி.ஐயின் செய்தியின்படி, LTC-க்கு பதிலாக அரசு ஊழியர்களுக்கு ரொக்க வவுச்சர்களை வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார்.
யாருக்கு தள்ளுபடி கிடைக்கும்
அரசாங்கத்தின் LTC தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு, தன் ஸ்பெஷல் ஆஃபருக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என மாருதி சுசுகி நம்புகிறது. புதிய கார் வாங்குவதில் மாருதி சுசுகி அளிக்கும் இந்த சலுகையை அரசு நிறுவனங்கள், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளின் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் வெவ்வேறு மாடல்களில் வெவ்வேறு தள்ளுபடிகள் வழங்கப்படும்.
ALSO READ: நீங்கள் Maruti-ன் வாடிக்கையாளரா? உங்களுக்காக காத்திருக்கின்றன அதிரடியான Offers!!
இந்த கார்களுக்கு தள்ளுபடி
அரசு ஊழியர்களுக்கான (Government Employees) இந்த திட்டம் அரினா மற்றும் நெக்ஸா தொடரில் விற்கப்படும் - ஆல்டோ, செலெரியோ, எஸ்-பிரீசோ, வேகன்-ஆர், ஈகோ, ஸ்விஃப்ட் டிசைர், இக்னிஸ், பலேனோ, விட்டாரா பிரெஸா, எர்டிகா, எக்ஸ்எல் 6, சியாஸ் மற்றும் எஸ்-கிராஸ் ஆகிய கார்களுக்கு பொருந்தும் என மாருதி நிறுவனம் கூறியுள்ளது.
அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல்
COVID-19 தொற்றுநோய்களின் போது நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்க அரசாங்கம் பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மாருதி சுசுகி நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். ‘பொருளாதாரத்தை ஆதரிப்பதும் நேர்மறையான போக்குகளைப் பின்பற்றுவதும் எங்களது கடமையாகும்.’ என்று அவர் கூறினார். பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாகும் என்று ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்தார்.
மாருதி சுசுகிக்கு வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய பிரிவாகும் இது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட LTC பண வவுச்சர் திட்டத்தின் மூலம் சுமார் 45 லட்சம் மத்திய மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 2021 மார்ச் 31 க்குள் ரூ .28,000 கோடி கூடுதல் வாடிக்கையாளர் தேவையை உருவாக்கும்.
ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR