Amazon அட்டகாச தீபாவளி சரவெடி: 70% தள்ளுபடி, எக்கச்சக்க சலுகைகள்

இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளமான amazon.in இல் லாக் இன் செய்ய வெண்டும். அல்லது அமேசான் செயலியில் உள்நுழைந்து சலுகைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 02:05 PM IST
  • எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அமேசானில் 70 சதவீதம் வரை தள்ளுபடி.
  • amazon.in இல் லாக் இன் செய்து பல்வேறு பொருட்களில் உள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
  • அமேசான் தந்தேரஸ் ஷாப்பிங் ஸ்டோர் தங்க நாணயங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
Amazon அட்டகாச தீபாவளி சரவெடி: 70% தள்ளுபடி, எக்கச்சக்க சலுகைகள்  title=

Amazon Diwali Sale 2021 Offers: இந்த தீபாவளியில் உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை ஆச்சரியப்படுத்தும் பரிசுகளை வழங்க அமேசான் அட்டகாசமான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது.

அமேசான் (Amazon) கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அமேசான் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான amazon.in இல் லாக் இன் செய்து பல்வேறு பொருட்களில் உள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

அமேசான் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து சமீபத்தில் ட்வீட் செய்துள்ளது. "உங்கள் அன்புக்குரியவர்களை பரிசுகள் மூலம் ஆச்சரியப்படுத்துங்கள்! #AmazonGreatIndianFestival இல் எலக்ட்ரானிக் பொருட்களில் 70% வரை தள்ளுபடி* பெறுங்கள். இங்கே ஷாப்பிங் செய்யுங்கள்: amazon.in." என்று தனது ட்வீட்டில் அமேசன் தெரிவித்துள்ளது.

அமேசான் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்பின் விலை ரூ.52,190 ஆகும். இதை அமேசான் ரூ.33,990-க்கு வழங்குகிறது என்பதை ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். ரூ.32,900 விலை கொண்ட ஆப்பிள் (Apple) வாட்ச் எஸ்இ (ஜிபிஎஸ், 44 மிமீ) ரூ.27,900 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ALSO READ: Samsung இன் 32-இன்ச் Smart TV இல் மிகப்பெரிய தள்ளுபடி 

மொபைல்கள் மற்றும் அக்சசரிக்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடி இருப்பதையும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். மேலும், சிறந்த தரமதிப்பீடு செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை ரூ.99 என்ற மிகக்குறைந்த விலையில் தொடங்குகிறது.

ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினாலும், இஎம்ஐ வசதியை பயன்படுத்திக் கொண்டாலும், 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக்சிஸ் வங்கி, சிட்டி பேங்க், அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) கிரெடிட் கார்டு மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி கார்டுகளில் சலுகைகள் கிடைக்கின்றன.

Amazon பயனர்கள் Amazon Dhanteras ஷாப்பிங் ஸ்டோரைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அமேசான் தந்தேரஸ் ஷாப்பிங் ஸ்டோர் தங்க நாணயங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. வெள்ளி நாணயங்களுக்கு 20 சதவீதம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 40 சதவீதம் வரையிலான தள்ளுபடியையும் அமேசான் வழங்குகிறது. மேலும், வைர நகைகளுக்கு 0 சதவீதம் மேக்கிங் கட்டணத்துக்கான சலுகையும் வழங்கப்படுகிறது.

அமேசான் தந்தேரஸ் ஷாப்பிங் ஸ்டோர் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பல்வேறு தள்ளுபடிகளை வழங்குகிறது. உதாரணமாக, சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 40 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவி மற்றும் புரொஜெக்டர்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இவை தவிர, Alexa, Fire TV மற்றும் Kindle ஆகியவற்றில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளன. ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும், பிரிண்டர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியும் பெறலாம். மற்றும் வீடியோ கேம்களுக்கு 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளமான amazon.in இல் லாக் இன் செய்ய வெண்டும். அல்லது அமேசான் செயலியில் உள்நுழைந்து சலுகைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ: தீபாவளி ஆன்லைன் ஷாப்பிங்: மோசடியில் இருந்து தப்பிக்க 10 டிப்ஸ்..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News