அலர்ட்- உங்கள் வங்கியின் இந்த சேவை மே 23 மதியம் 12 மணிக்குப் பிறகு நிறுத்தப்படும்!

இதன் காரணமாக மே 23 ஆம் தேதி வாடிக்கையாளர்களுக்கு நெஃப்ட் சேவை கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2021, 05:21 PM IST
அலர்ட்- உங்கள் வங்கியின் இந்த சேவை மே 23 மதியம் 12 மணிக்குப் பிறகு நிறுத்தப்படும்! title=

கொரோனாவின் நெருக்கடி நிறைந்த இந்த சூழ்நிலையில், சாதாரண மக்கள் இப்போது வீட்டில் உட்கார்ந்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்கிறார்கள். ஆனால் மே 23 அன்று இந்த சேவையில் சிறிது பிரச்சனை ஏற்படும். தேசிய மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பு (NEFT) என்பது முழு நாட்டிலும் இயங்கும் ஒரு கட்டண முறையாகும், அதில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் மாற்றப்படுகிறது. NEFT என்பது ஆன்லைன் வங்கியின் ஒரு பகுதியாகும், அதில் சில நிமிடங்களில் பணம் மாற்றப்படும். இந்த மின்னணு முறையின் மூலம், வங்கி கிளையிலிருந்து மற்றொரு நபருக்கு பணம் மாற்றப்படுகிறது. இதற்காக வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இந்த வசதி NEFT இயக்கப்பட்ட வங்கியில் மட்டுமே கிடைக்கிறது.

ரிசர்வ் வங்கி (RBI) தனது ட்விட்டர் மூலம் இது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ளது. அதில்., மே 22 அன்று வங்கிகளில் செயல்பாடுகள் முடிவடைந்த பின்னர் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக மே 23 அன்று காலை 00:01 மணி முதல் 14:00 மணி வரை (மதியம் 12 மணி முதல் 2 மணி வரை) NEFT வேலை செய்யாது. ஆனால் RTGS சேவை தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.

ALSO READ | Allahabad Bank கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி, புதிய விதிகள் அமல்!

 

IMPS என்றால் என்ன
IMPS முறையும் உடனடி பண பரிமாற்ற முறையாகும். இது சாதாரண மக்களால் பெரும்பாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் இந்த முறையில் தான் நடக்கிறது. Immediate Payment Service முறையில் வாரத்தின் ஏழு நாட்களிலும் எந்த நேரத்திலும் 24/7 உடனடியாக பண பரிவர்த்தனை செய்ய முடிவும்.

NEFT என்றால் என்ன
அக்டோபர் 2005ல் NEFT தொடங்கப்பட்டது. ஒரு வங்கிக்கிளையிலிருந்து மற்றொரு வங்கிக்கிளைக்கு பணத்தை பாதுகாப்பாக அனுப்பிட NEFT சிறந்ததொரு முறையாகும். இது தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை மிகப்பாதுகாப்பான, தொழில்நுட்ப முறையைக் கையாளும் PKI கட்டமைப்பு முறையைக் கையாளுகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News