Changes From August 1: ஜூலை இன்னும் சில நாள்களில் முடியப்போகிறது, அதாவது இந்த ஆண்டின் 7ஆவது மாதம் நிறைவடைகிறது. வரும் திங்கட்கிழமை அன்று ஆகஸ்ட் மாதம் பிறக்க உள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்கு மாதக் கடைசி நாள்கள் சற்று மனவேதனை தருபவையாக இருந்தாலும், அடுத்த மாதம் பிறக்க உள்ளதை எதிர்பார்த்தும் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.
மாதச் சம்பாளக்காரர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் வருமானம் வருவது இதற்கு ஒரு காரணம் என்றாலும், மாதாமாதம் தங்களின் பட்ஜெட்களை பதம்பார்க்கும் சில விஷயங்கள், பொருள்கள், சேவைகளின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட சிலவற்றின் விலைகளில் மாற்றம் இருக்கும். மேலும், வங்கி நாள்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வருமான வரி தாக்கல் போன்ற எண்ணற்ற சேவைகளில் அமலாகும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும்.
அந்த வகையில், வரும் ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் பிறக்க உள்ளதால் மக்கள் 1ஆம் தேதி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஜூலை மாதம் பல வழிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, வருமான வரி இந்த மாத இறுதிக்குள் அதாவது ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், மாற்றப்பட இருக்கும் விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆகஸ்ட் 1ஆம் முதல் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பதை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், விரைவில் 50% டிஏ, ஊதிய உயர்வு
ஐடிஆர் தாக்கல் செய்யாததற்கு அபராதம்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. இந்த கடைசி தேதிகள் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கானது. இந்தத் தேதிக்குள் நீங்கள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வழக்கில், நீங்கள் வரியுடன் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்ததற்காக வரி செலுத்துவோர் ரூ.5,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், காலக்கெடு நீட்டிக்கப்பட்டால், அதன் அறிவிப்பும் வெளியாகலாம்.
வங்கி விடுமுறை தினங்கள்
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறைகள் என்றால் ரக்ஷா பந்தன், முஹர்ரம் மற்றும் பல பண்டிகைகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனுடன் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையும் அடங்கும்.
எல்பிஜி சிலிண்டர் விலை
ஆகஸ்ட் மாதத்தில் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலையை மாற்றலாம். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் எல்பிஜி விலையை மாற்றுகின்றன. இது தவிர, பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி விகிதத்திலும் மாற்றம் இருக்கலாம்.
மேலும் படிக்க | ரயில்வே தந்த முக்கிய அப்டேட்: இந்த விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு இனி சிரமம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ