திருமணம் ஆகாமல் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த ஜோடிக்கு நடந்த கொடூரம்!!

திருமணம் ஆகாமல் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த 6 ஜோடிகளுக்கு பொது மக்கள் மத்தியில் பிரம்படி தண்டனையை நிறைவேற்றியது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Last Updated : Mar 11, 2019, 01:12 PM IST
திருமணம் ஆகாமல் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த ஜோடிக்கு நடந்த கொடூரம்!! title=

திருமணம் ஆகாமல் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த 6 ஜோடிகளுக்கு பொது மக்கள் மத்தியில் பிரம்படி தண்டனையை நிறைவேற்றியது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. இல்லையெனில், செய்திகள் மூலம் மக்கள் அறிந்து கொள்கின்றனர். அதில் சில நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் உண்டு. சிரிப்பையும் வரவைக்கும். இந்நிலையில், திருமணம் ஆகாமல் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த 6 ஜோடிகளுக்கு பொது மக்கள் மத்தியில் பிரம்படி தண்டனையை நிறைவேற்றியது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவில் சுமத்ரா மாகாணத்தில் சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அதேபோல் திருமணமாகாமல் ஒரு ஆணும், பெண்ணும் தனியாக இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் பந்தா ஏக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் நடத்திய சோதனையின்போது திருமணமாகாமல் 6 ஜோடிகள் ஒன்றாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்த காவல்துறையினருக்கு வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர். இந்த வழக்கில் 12 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டது. முன்று மாதங்கள் சிறை தண்டனைக்கப் பிறகு அவர்கள் கடந்த வாரம் விடுதளியாகியுள்ளனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 17 முதல் 25 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. 

பெண்கள் வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தனர். ஆனால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இதனை ஆர்வத்தோடு கண்டு களித்ததோடு, சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவும் செய்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News