ஆதார் அடையாள அட்டை தொடர்பான மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உதவி எண்ணெய் அளிக்கவேண்டும் என்ற பதற்றம் தேவையில்லை எனவும் அடையாள அட்டை ஆணையம் அறிவிப்பு!
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை தொடர்பான மக்களின் தகவல்கள் திருடப்படுவதாக பல சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. இதயைடுத்து, ஸ்மார்ட் போன்களில், ஆதார் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என 11 இலக்க எண் திடீரென தானாகவே பதிவானது. இது சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்க்கு கூகுள் நிறுவனம் காரணம் என ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களுக்காக 2014 ஆம் ஆண்டு வழங்கிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆதார் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆதாரின் பாதுகாப்பு குறித்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆதார் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் மக்களுக்கு தேவையற்ற கால விரயம்தான் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் ஆன்ட்ராய்டு செல்போன்களில் பதியப்பட்டுள்ள 11 இலக்க எண்ணால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆதார் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
UIDAI condemns vested interests for misusing Google's "inadvertent" act as an opportunity to spread rumours against Aadhaar
Read @ANI Story | https://t.co/N2mFXaGG3t pic.twitter.com/zoMd07oHtK
— ANI Digital (@ani_digital) August 5, 2018
ஆதார் சேலஞ்சில் டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தகவல்களை ட்விட்டரில் ஹேக்கர்ஸ்! தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது!