Aadhaar Verification: புதிய விதியை உருவாக்கியது அரசாங்கம், விவரம் இதோ

Aadhaar Latest News: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். இது இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. யுஐடிஏஐ ஆதார் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2022, 02:00 PM IST
  • உங்கள் ஆதாரை ஆஃப்லைனில் அல்லது இணையம் இல்லாமல் அல்லது ஆன்லைனில் செக் செய்ய முடியும்.
  • இதுபற்றி இதுவரை தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • சரிபார்ப்பிற்காக டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை நீங்கள் இப்போது வழங்க வேண்டும்.
Aadhaar Verification: புதிய விதியை உருவாக்கியது அரசாங்கம், விவரம் இதோ title=

ஆதார் சமீபத்திய செய்திகள்: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். இது இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. யுஐடிஏஐ ஆதார் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது. 

ஆதார் சரிபார்ப்பு தொடர்பாக அரசு புதிய விதியை உருவாக்கியுள்ளது. இந்த விதியின் கீழ், உங்கள் ஆதாரை ஆஃப்லைனில் அல்லது இணையம் இல்லாமல் அல்லது ஆன்லைனில் செக் செய்ய முடியும். இதுபற்றி இதுவரை தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டது

விதிகளின்படி, சரிபார்ப்பிற்காக டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை நீங்கள் இப்போது வழங்க வேண்டும். இந்த டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை ஆதாரின் அரசாங்க அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்க வேண்டும். பயனரின் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எழுத்துக்கள் இந்த ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய ஏற்பாட்டில் என்ன இருக்கிறது?

இந்த புதிய விதியில், ஆதார் e-KYC சரிபார்ப்பு செயல்முறைக்காக ஆதார் வைத்திருப்பவருக்கு ஆதார் காகிதமில்லாத ஆஃப்லைன் e-KYC ஐ அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிக்கு வழங்குவதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஏஜென்சி ஆதார் எண் மற்றும் ஆதார் வைத்திருப்பவர் வழங்கிய பெயர், முகவரி போன்றவற்றை மைய தரவுத்தளத்துடன் பொருத்தும். பொருத்தம் சரியானது என கண்டறியப்பட்டால் சரிபார்ப்பு செயல்முறை முன்னோக்கி கொண்டு செல்லப்படும்.

மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ 

ஆதார் உரிமையை அளிக்கிறது

ஆதார் காகிதமற்ற ஆஃப்லைன் E-KYC என்பது யுஐடிஏஐ மூலம் வழங்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணமாகும். இந்த ஆவணத்தில் ஆதார் எண், பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் புகைப்படத்தின் கடைசி 4 எழுத்துக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. 

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்த புதிய விதியின் கீழ், ஆதார் வைத்திருப்பவர்கள், தங்களது e-KYC தரவு எதுவும் சேமிக்கப்படுவதற்கு சரிபார்ப்பு நிறுவனத்திற்கு மறுப்பும் தெரிவிக்கலாம், இதற்கான உரிமையை இந்த விதி வழங்குகிறது.

ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பின் வகைகள்

விதிகளின்படி, யுஐடிஏஐ பின்வரும் வகைகளில் ஆஃப்லைன் சரிபார்ப்பு சேவைகளை வழங்கும்.
- கியூஆர் குறியீடு சரிபார்ப்பு
- ஆதார் காகிதமற்ற ஆஃப்லைன் E-KYC சரிபார்ப்பு
- மின் ஆதார் சரிபார்ப்பு
- ஆஃப்லைன் காகித அடிப்படையிலான சரிபார்ப்பு

ஆதார் சரிபார்ப்பு முறைகள்

ஆன்லைன் ஆதார் சரிபார்ப்புக்கு ஏற்கனவே உள்ள பல அமைப்புகள் உள்ளன. ஆஃப்லைன் விருப்பங்களுடன் கிடைக்கக்கூடிய ஆதார் சரிபார்ப்பின் பல்வேறு முறைகள் பின்வருமாறு.

- மக்கள்தொகை அங்கீகாரம்
- ஒரு முறை PIN அடிப்படையிலான அங்கீகாரம்
- பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரம்
- பல காரணி அங்கீகாரம்

மேலும் படிக்க | 10 லட்சம் டெபாசிட்டுக்கு 3.14 லட்சம் வட்டி! எஸ்பிஐ-ன் சிறப்பான திட்டம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News