மொபைல் எண் மாறிவிட்டதா? இன்றே ஆதாருடன் இணைத்து விடுங்கள்: செயல்முறை இதோ

Aadhaar Update: யுஐடிஏஐ இணையதளத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2022, 03:30 PM IST
  • ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியம்.
  • மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாததால் சிக்கல் ஏற்படும்.
  • ஆதாரில் புதிய ஃபோன் எண்ணை எப்படி அப்டேட் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மொபைல் எண் மாறிவிட்டதா? இன்றே ஆதாருடன் இணைத்து விடுங்கள்: செயல்முறை இதோ title=

ஆதார் அட்டை புதுப்பிப்பு / திருத்தம்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அனைத்து அரசு பணிகளுக்கும் இது அவசியமான ஆவணமாகும். மொபைல் எண்ணையும் ஆதார் அட்டையுடன் இணைப்பதும் அவசியமாகும். 

நிதி பரிவர்த்தனைகளின் சரிபார்ப்புக்கு உங்கள் தொலைபேசி எண்ணில்தான் ஓடிபி வரும். ஆகையால், யுஐடிஏஐ இணையதளத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம். 

ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணை எப்படி மாற்றுவது?

mAadhaar செயலியை நிறுவுவதற்கும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முதலில் கேட்கப்படும். ஆனால் உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால், ஆதார் சரிபார்ப்பிற்கு ஓடிபி-ஐ பெற முடியாது. ஆகையால், உங்கள் மொபைல் எண் மாறினால், அதை உங்கள் ஆதார் அட்டையிலும் மாற்றுவது மிகவும் அவசியமாகும். உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை எளிதாக ஆதாருடன் இணைக்கலாம். புதிய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஆதார் பதிவு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்

ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண் செயலிழந்து விட்டாலோ, தொலைந்து விட்டாலோ, அல்லது, மாறி விட்டாலோ, நீங்கள் உங்கள் புதிய எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். அதற்கு முதலில் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | EPFO: இந்த தேதிக்குள் வட்டி பணம் கணக்கில் வரும், இருப்பு நிலையை இப்படி தெரிந்துகொள்ளலாம் 

ஆதாரில் புதிய தொலைபேசி எண்ணை எவ்வாறு புதுப்பிப்பது

1. இதற்கு நீங்கள் முதலில் உங்கள் தனிப்பட்ட ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். 

2. தொலைபேசி எண்ணை இணைக்க இங்கே உங்களுக்கு ஒரு படிவம் கொடுக்கப்படும்.

3. இந்தப் படிவம் 'ஆதார் திருத்தப் படிவம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் உங்கள் சரியான தகவல்களை நிரப்பவும்.

4. இப்போது நிரப்பப்பட்ட படிவத்தை ரூ.25 கட்டணத்துடன் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும்.

5. இதற்குப் பிறகு உங்களுக்கு ஒரு சீட்டு வழங்கப்படும். இந்த சீட்டில் புதுப்பிப்பு கோரிக்கை எண் இருக்கும். இந்தக் கோரிக்கை எண் மூலம், புதிய தொலைபேசி எண் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கலாம்.

6. மூன்று மாதங்களில் உங்கள் ஆதார் புதிய மொபைல் எண்ணுடன் இணைக்கப்படும். புதிய மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும் போது அதே எண்ணில் OTP வரும்.

7. அந்த ஓடிபி-ஐப் பயன்படுத்தி, உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

8. யுஐடிஏஐ-ன் கட்டனமில்லா எண்ணான 1947ஐ அழைத்து புதிய மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டதன் சமீபத்திய நிலையை அறியலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News