அமெரிக்காவில் நாய் ஒன்றுக்கு 36 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது தெரியுமா? நாய் வேலைக்கு போய் சம்பாதித்ததா? இல்லை அந்த நாய் தொழிலதிபரா? ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இது ஆச்சரியமான உண்மை.
இந்த கதையைக் கேட்டால், பிறந்தா இப்படி ஒரு நாயா பிறக்கனும் என்ற விருப்பம் உங்கள் மனதில் எழுந்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. அந்த நாயின் அதிர்ஷ்டம் அப்படி!
செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்த ஒரு அமெரிக்கர் (Pet Dog), அதன் மீது எழுந்த அதீத பாசத்தால் அதற்கு சுமார் 50 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்துவிட்டார். இது அதன் பராமரிப்புக்காகவாம்!
தனது செல்ல நாயை கவனித்துக்கொள்வதற்காக இதைச் செய்தார். ஒவ்வொரு மாதமும் நாயைப் பராமரிக்க ஒரு பெண்ணுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் லுலுவின் அன்புக்குரிய முதலாளி இறந்துவிட்டார்.
அன்புக்கோ உண்டோ அடைக்கும் தாழ், பாசத்துக்கு முன்னாடி பணம் எல்லாம் பொருட்டே இல்லை என்று சொல்லும் நண்பேண்டா கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ALSO READ | NASA: ஆற்றில் இருப்பது மணல் மட்டுமல்ல, தங்கம், பொன், Gold…
தனது செல்லக் குட்டிக்கு ’லுலு’ என்று பெயர் வைத்தார். இந்த நாய் எல்லை கோலி (Border Collie) இனத்தைச் சேர்ந்தது. லுலு (Lulu) என்ற செல்லப்பிராணியின் உரிமையாளர் அதை மிகவும் நேசித்தார். அவர் தனது செல்ல நாயை கவனித்துக்கொள்வதற்காக இதைச் செய்தார்.
நாய் மிகவும் விசுவாசமான விலங்கு என்று கூறப்படுகிறது. அதனால்தான் சிலர் தங்கள் செல்ல நாயை குடும்ப உறுப்பினராக வைத்திருக்கிறார்கள். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான நட்பின் பல கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வேண்டும், ஆனால் உங்கள் நாயை மிகவும் நேசிக்கும் இந்த விஷயம் அமெரிக்காவின் நாஷ்வில் (Nashville) என்ற நகரத்தில் நடைபெற்ற உண்மைக் கதை.
உரிமையாளர் இறந்துவிட்டார்
செல்ல நாய் லுலுவை கவனித்துக் கொள்ளும் மார்தா பர்டன் என்பவர் கூறுவதன்படி, லுலுவின் உரிமையாளர் பில் டோரிஸ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்று தெரிவித்தார். அவர் கடந்த ஆண்டு 2020 இல் இறந்தார்.
பில் டோரிஸ் தனது செல்ல நாய் லுலுவின் பராமரிப்பிற்காக பணத்தை டெபாசிட் செய்யவும், ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் விருப்பம் தெரிவித்ததாக மார்தா பர்டன் (Martha Burton) கூறினார்.
பில் டோரிஸ் (Bill Doris) தனது செல்ல நாய் லுலுவை மிகவும் நேசித்தார். தற்போது அவர் இவ்வளவு பெரிய சொத்தை விட்டுச் சென்றிருக்கிறார். லுலுவை கவனித்துக் கொள்வதற்காக இந்த சொத்து எப்படி செலவிடப்படும்? யாருக்குத் தெரியும்?
ஆனால் லுலு மிகவும் அதிர்ஷ்டமான செல்லக்குட்டி தான்…
ALSO READ | Homes On Sale: இத்தாலியில் வெறும் ₹100 க்கு வீடு வாங்க பொன்னான வாய்ப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR