ஒடிசா அரசின் அகவிலைப்படி உயர்வின் சமீபத்திய செய்தி: மத்திய அரசை (Central Government) தொடர்ந்து, மாநில அரசும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பரிசாக வழங்க துவங்கியுள்ளது. அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநில (Uttar Pradesh Government) அரசை அடுத்து, தற்போது ஒடிசா அரசும் (Odisha Government) ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி (Dearness Allowance) அறிவிப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒடிசா மாநில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி வரும் காலங்களில் அதிக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு (Tamil Nadu Government) பரிசாக வழங்கியுள்ளது. அதன்படி இந்த பண்டிகை காலத்தில், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு (DA Hike) மற்றும் நிலுவைத் தொகை தீபாவளிக்கு முன்னதாகவே கிடைக்கும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! உங்கள் கணக்கில் பணமோசடி நடக்கலாம்! உடனே இத பண்ணிடுங்கள்!
ஏஎன்ஐ ட்வீட் செய்துள்ளது:
இது தொடர்பாக ஏஎன்ஐ ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஏஎன்ஐ இன் ட்வீட்டில், ஒடிசா அரசாங்கம் மாநில அரசு ஊழியர்கள் (Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA - Dearness Allowance) மற்றும் Dearness Relief (TI) ஆகியவற்றை முறையே 4 சதவீதம் (DA Hike) உயர்த்தியுள்ளது, பிந்தையது 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதம் ஆக உள்ளது. அந்த விகிதத்தில் அகவிலைப்படி (Dearness Allowance) கிடைக்கும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA - Dearness Allowance) மற்றும் TI செலுத்துதல் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Odisha Government hikes by 4% the Dearness Allowance (DA) and Dearness Relief (TI)to State government employees and pensioners respectively to enhance the rate from 42% to 46%. The enhanced DA and TI will be paid from 1st July retrospectively.
— ANI (@ANI) October 20, 2023
4.5 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ஒடிசா அரசின் (Odisha Government) உயர்த்தப்பட்ட அகவிலைப்படியால் பயனடைவார்கள். பணியாளர்களுக்கு (Government Employees) ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகையாகப் பணம் கிடைக்கும்.
மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது:
இதயனிடையே சமீபத்தில் மத்திய அரசும் ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance 4 Percentage Hike) 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இனி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 46 சதவீதம் வழங்கப்படும். முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள்
அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது:
பொதுவாக மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகின்றன. முதல் அதிகரிப்பு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது அதிகரிப்பு ஜூலை மாதத்திலும் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் 52 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் பலனைப் பெறுகின்றனர்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | SBI vs HDFC வங்கி vs ICICI... எந்த வங்கியின் FD பெஸ்ட்? தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ