7th Pay Commission பம்பர் செய்தி: HBA வட்டி விகிதங்களை குறைந்தது அரசு

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு அல்லது மனை வாங்குவதற்கும், வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடனை அடைப்பதற்கும் வழங்கப்படும் முன்பணத்திற்கான வட்டி விகிதம் 80 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.8 சதவீதம் குறைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2022, 06:47 PM IST
  • மத்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
  • அரசாங்கம் HBA வட்டி விகிதத்தை குறைக்கிறது.
  • இப்போது மத்திய பணியாளர்கள் மலிவாக வீட்டுக்கடன் பெறலாம்.
7th Pay Commission பம்பர் செய்தி: HBA வட்டி விகிதங்களை குறைந்தது அரசு title=

7வது ஊதியக்குழு /எச்பிஏ வட்டி விகிதங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்ள வங்கிகளில் இருந்து எடுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை (HBA) குறைத்துள்ளது. மத்திய அரசு வீடு கட்டும் கடனுக்கான வட்டியை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைத்துள்ளது. இது குறித்து அரசு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு அல்லது மனை வாங்குவதற்கும் அல்லது வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் வழங்கப்படும் முன்பணத்தின் வட்டி விகிதத்தை 80 அடிப்படை புள்ளிகள், அதாவது 0.8 சதவீதம் குறைத்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை இந்த எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இப்போது மத்திய ஊழியர்கள் வீடு கட்டும் கனவை எளிதாக நனவாக்க முடியும்.

7.1 சதவீத அளவில் முன்பணம்  கிடைக்கும்
அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, இப்போது ஊழியர்கள் 7.1 சதவீத வட்டி விகிதத்தில் மார்ச் 31, 2023 வரை முன்பணம் பெறலாம். முன்னதாக இந்த விகிதம் ஆண்டுக்கு 7.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அரசு முன்பணத்தின் வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து தெரிவித்துள்ளது.

எவ்வளவு முன்பணம் எடுக்க முடியும்?
அரசு அளித்துள்ள இந்த சிறப்பு வசதியின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தின்படி 34 மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், வீட்டின் விலை அல்லது ஊழியரின் செலுத்தும் திறன் ஆகியவற்றிலிருந்து, ஊழியர்களுக்கு எது குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஊதிய உயர்வு கனவு கலைந்தது 

மலிவு விலையில் வீடு கட்ட முன்பணம்
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் எச்பிஏ (வீடு கட்ட முன்பணம்) விதிகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் புதிய வீடு கட்டவோ அல்லது புதிய வீடு- பிளாட் வாங்கவோ 34 மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் அல்லது வீட்டின் விலை அல்லது முன்பணத்தை திருப்பிச் செலுத்தும் திறனில் எது குறைவாக இருக்கிறதோ அந்தத் தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இப்போது வரை, இந்த முன்பணத்திற்கு 7.9 சதவீதம் என்ற விகிதத்தில் எளிய வட்டி வசூலிக்கப்பட்டது, அது இப்போது 7.1 ஆக குறையும். தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எச்பிஏ என்றால் என்ன?
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை அளிக்கிறது. இதில், பணியாளர் தனது சொந்த அல்லது மனைவியின் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பணம் வாங்கலாம். இந்த திட்டம் 2020 அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 2023 மார்ச் 31 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.1% வட்டி விகிதத்தில் வீடு கட்டுவதற்கான முன்பணம் வழங்கப்படுகிறது.

வீட்டை விஸ்தரிப்பதற்கான முன்பணம்
ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் விதிகளின்படி, வீட்டை விஸ்தரிக்க, மத்திய பணியாளர்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் முன்பணம் அல்லது 34 மாத அடிப்படை சம்பளம், வீட்டை விரிவுபடுத்துவதற்கான செலவு அல்லது முன்பணம் செலுத்தும் திறன் ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ, அந்த தொகையை பெறலாம். முன்பணமாக எடுக்கப்பட்ட தொகை முதல் 15 ஆண்டுகள் அல்லது 180 மாதங்களுக்கு அசலாகப் பெறப்படும். மீதமுள்ள ஐந்து ஆண்டுகளில் அதாவது 60 மாதங்களில், வட்டியாக EMI-யில் திருப்பிச் செலுத்த வேண்டும். முன்பணமும் 7.1% என்ற விகிதத்தில் கிடைக்கும்.

வங்கியின் வீட்டுக் கடனை அடைக்க முன்பணம் எடுத்து செலுத்தலாம்
புதிய வீடு கட்டுவதற்கும், பிளாட் வாங்குவதற்கும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதை முன்பணம் எடுத்து திருப்பிச் செலுத்தலாம். இந்த முன்பணம் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் கிடைக்கும். ஆனால் தற்காலிக பணியாளர்களின் பணி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும். 

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய நாளிலிருந்து பணியாளர்களுக்கு வீடு கட்ட முன்பணம் கிடைக்கும். முன்பு வீடு கட்ட முன்பணம் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், கடன் கொடுத்த நாள் முதல் இந்தத் தொகை கிடைக்கும். வங்கியில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான முன்பணம் மொத்தமாக வழங்கப்படும். எவ்வாறாயினும், முன்பணத்தை வழங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் பணியாளர்கள் எச்பிஏ பயன்பாட்டுச் (HBA Utilization Certificate) சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News