7th Pay Commission Latest News: தீபாவளி சமயத்தில் கிடைத்த நல்ல செய்திக்குப் பிறகு, தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் புத்தாண்டு பரிசைப் பெற தயாராகலாம். சமீபத்தில், அரசு ஊழியர்கள் அகவிலைப்படி, எச்.ஆர்.ஏ மற்றும் பயணப்படியில் அதிகரிப்பைப் பெற்றனர்.
புத்தாண்டில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஜீ பிஸினஸின் ஒரு அறிக்கையின்படி, புத்தாண்டில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் (ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அல்லது அடிப்படை சம்பளம் தானாகவே உயரும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் (Government Employees) தங்களது ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி 2022 மத்திய பட்ஜெட்டுக்கு முன் முடிவு செய்யப்படும் என்று அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு டி.ஏ அரியர் பற்றிய சூப்பர் நியூஸ் விரைவில்
மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணிக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அது பட்ஜெட் செலவினத்தில் சேர்க்கப்படும்.
ஃபிட்மென்ட் காரணி குறித்து மத்திய அரசு (Central Government) ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டால், அதன் பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் (Salary) உயரும். ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்புடன், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும்.
அரசு ஊழியர்கள் தற்போது 2.57 சதவீத ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, இது 3.68 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
அப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 8000 ரூபாய் உயரும். அதாவது தற்போது வரை ரூ.18000 ஆக இருந்த தொகை இப்போது ரூ.26000 ஆக அதிகரிக்கும்.
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டில் கிடைக்கும் குட் நியூஸ், சம்பளம் உயரும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR