7th Pay Commission Latest News Today: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி சமீபத்தில் அதிகரித்தது. எனினும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு விதத்தில் ஏமாற்றமே உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் யோசனையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு என்ன கூறியுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அடிப்படை ஊதியத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், இதுபோன்ற எந்த திட்டத்தைப் பற்றியும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றார். 7வது மத்திய ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் ஊதியத்தை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அனைத்து வகை ஊழியர்களுக்கும் 2.57 என்ற ஃபிட்மெண்ட்ட் பாக்டர் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இருந்த முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறதா என்று நிதித்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி! மீண்டும் சம்பள உயர்வு
இப்போது அகவிலைப்படி 31% ஆக உள்ளது
முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 17% அகவிலைப்படி கிடைத்தது. ஜூலை 1, 2021 முதல், இது 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2020 இல் அகவிலைப்படி 4 சதவீதமும், ஜூன் 2020 இல் 3 சதவீதமும், ஜனவரி 2021 இல் 4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) பிற தகவல்கள் விரைவில் வெளியாகக்கூடும். 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது மொத்த அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த மாத சம்பளத்துடன் 31% அகவிலைப்படி வழங்கப்படும்.
அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கும்
இதுமட்டுமின்றி, அகவிலைப்படியை அதிகரிப்பதுடன், மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-க்கு மேல் இருப்பதால், வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.
செலவினத் துறை 7 ஜூலை 2017 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டது, அதில் அகவிலைப்படி 25% ஐ விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆகையால் வீட்டு வாடகை கொடுப்பனவும் திருத்தப்பட்டது. ஜூலை 1 முதல், அகவிலைப்படி அதிகரித்து 28% ஆக உயர்ந்ததால், வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிப்பது அவசியமானது.
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு, ஊதிய உயர்வுக்கு தயாராகும் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR