7வது ஊதியக்குழு, அகவிலைப்படி உயர்வு கணக்கீடு 2024: பண்டிகைக் காலத்தில் மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியாகயுள்ளது. ஏனெனில் தற்போது வரும் ஆண்டிற்கான திட்டமிடல் தொடங்கியுள்ளது. இது தொடர்பான எண்கள் வெளி வந்துக்கொண்டே இருக்கிறது. புத்தாண்டில் மத்திய ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த பரிசு வரப்போகிறது என்பதை இது குறிக்கிறது. குறிப்பாக அகவிலைப்படி உயர்வு தொடர்பாக (dearness allowance) மகிழ்ச்சிக்கான செய்தியை பெறலாம். முன்னதாக ஜூலை 1, 2023 முதல், அகவிலைப்படி 46 சதவீதமாக திருத்தப்பட்டது. இப்போது அடுத்த திருத்தம் ஜனவரி 2024 இல் நடைபெற உள்ளது. மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களை நாம் பார்த்தால், திருத்தம் இன்றுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய திருத்தமாக இருக்கும்.
அகவிலைப்படி 5 சதவீதம் அதிகரிக்கலாம்:
2024 ஆம் ஆண்டு மத்திய அரசு (Central Government Employees) ஊழியர்களுக்கு பல வழிகளில் முக்கியமானதாக இருக்கப் போகிறது. அகவிலைப்படி (Dearness Allowances) 50 சதவீதத்தை தாண்டும். அதே சமயம், தற்போதைய போக்கைப் பார்த்தால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA Hike) கடந்த 4 முறை 4 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது புத்தாண்டில், அகவிலைப்படியில் இதுவரை இல்லாத அளவுக்கு 5 சதவீத உயர்வு இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
DA மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் மூலம் தீர்மானிக்கப்படும்:
தற்போதைய போக்கின் படி, அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது நடந்தால், 5 சதவீதம் பெரிய ஜம்ப் இருக்கும். அகவிலைப்படி AICPI குறியீட்டிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. குறியீட்டில் பல்வேறு துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பணவீக்க தரவு பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் ஊழியர்களின் கொடுப்பனவு எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் நியூஸ்.. ரயில்வே புதிய அறிவிப்பு வெளியீடு
இப்போது அகவிலைப்படி எவ்வளவு வந்துள்ளது?
தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறியீட்டின் சமீபத்திய எண்ணிக்கை 137.5 புள்ளிகளாக உள்ளது, இதன் காரணமாக அகவிலைப்படி 48.54 சதவீதத்தை எட்டியுள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 49.30 சதவீதத்தை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் தரவுகள் ஜனவரி 2024 இல் எவ்வளவு DA அதிகரிக்கும் என்பதைத் தீர்மானிக்கும். இருப்பினும், இதற்கு நாம் டிசம்பர் 2023 ஏஐசிபிஐ குறியீட்டு - All India Consumer Price Index (AICPI)எண்களுக்காக காத்திருக்க வேண்டும்.
அகவிலைப்படியில் பெரிய முன்னேற்றம்:
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான AICPI எண்கள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியைத் தீர்மானிக்கும். அகவிலைப்படி 48.54 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 மாதங்கள் எண்கள் வர உள்ளன. மேலும் 2.50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 2024 ஜனவரியில் அகவிலைப்படியில் 5 சதவீதம் அதிகரிப்பு காணப்படலாம். மீதமுள்ள மாதங்களில் அகவிலைப்படி கணக்கீடு (Dearness Allowances - DA Calculator) 1-1 புள்ளி அதிகரிப்பைக் காட்டுகிறது, எனவே அகவிலைப்படியில் 5 சதவீதம் அதிகரிப்பு காணப்படுகிறது.
மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ