புது டெல்லி: நீங்கள் உங்கள் வேலையை இழந்து விட்டீர்கள். ஒரு மாதமாக வேலையில்லாமல் இருக்கும் நிலையில், உங்களுக்கு பணத் தேவை உள்ளது என்றால், உங்கள் பி.எஃப் கணக்கிலிருந்து 75% பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். இதுக்குறித்த தகவலை இ.பி.எஃப்.ஓ (Employees Provident Fund) தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளது. விதிப்படி, நீங்கள் ஒரு மாதத்திற்கு வேலையில்லாமல் இருந்தால், உங்கள் பிஎஃப் கணக்கில் 75% திரும்பப் பெறலாம். EPFO இன் அறிக்கைபடி, வேலையின்மை விஷயத்தில், உங்களுக்கு PF உரிமைகோரலுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை.
இது தொடர்பாக EPFO ஒரு அறிவிப்பை 2018 டிசம்பரில் வெளியிட்டது என்று உங்களுக்கு சொல்கிறோம். இந்த அறிவிப்பின்படி, கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு ஊழியரும் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், பி.எஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகையில் 75 சதவீதத்தை திரும்பப் பெற முடியும். இந்த தொகையை திரும்பப் பெற்ற பிறகும், உங்கள் பி.எஃப் கணக்கு முன்பு போலவே தொடரும், மேலும் திரும்பப் பெறப்பட்ட தொகையை கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.
#EPFO subscribers can avail advance of 75% of the entire PF accumulation incase of #unemployment of not less than 1 month. pic.twitter.com/EEubuQFeCE
— EPFO (@socialepfo) February 18, 2020
இது தவிர, நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அதாவது 60 நாட்கள் வேலையில்லாமல் இருந்தால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு முழுத் தொகையையும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஈபிஎஃப்ஒ கணக்கு வைத்திருப்பவருக்கு இது ஒரு நல்ல செய்தி என்று கூறமுடியாது. ஏனெனில் இது எதிர்காலத்தில் அந்த நபர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும்.
உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் பி.எஃப் தொகை போலவே, அதே தொகை உங்கள் நிறுவனத்தாலும் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். இந்த தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படுகிறது. 58 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது ஓய்வுக்குப் பிறகு இந்தத் தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.