சாலையோர மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை!!

சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள், கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதம், 3 ஆண்டுகள் சிறை!!

Last Updated : Sep 8, 2019, 01:49 PM IST
சாலையோர மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை!! title=

சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள், கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதம், 3 ஆண்டுகள் சிறை!!

சுற்றுச் சூழலைப் பாதுக்காக்கும் வகையிலும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதல் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, மரங்களை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மரங்களில் ஆணி அடிப்பது, கம்பியால் மரங்களைக் கட்டுவது, விளம்பரப்பலகைகள் வைப்பது போன்ற செயல்களால் பட்டுப்போகின்றன. எனவே இது போன்ற செயல்களைச் செய்பவர்களுகும், நிறுவனங்களுக்கும் ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என இன்று, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில்; "மரங்களுக்கு எந்தவிதமான சேதாரம் இன்றி அவைகளைப் பாதுக்காக்க வேண்டியது மக்களின் கடமை. எனவே மரங்களில் ஆணி அடித்தல் பெயிண்ட் அடித்தல், போன்ற செயல்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

Trending News