தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புதிய ஆண்டு பிறப்பதை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் (முதல் தமிழ் ஆண்டு) தொடங்கி அட்சய ஆண்டில் (அறுபதாவது தமிழ் ஆண்டு) ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
அந்தவகையில், 31_வது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி நிறைவடைந்து 32_வது ஆண்டான விளம்பி தமிழ் ஆண்டு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இன்று புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரங்களை பார்ப்போம்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின்
“தமிழ்ப் புத்தாண்டு” வாழ்த்துச் செய்தி. pic.twitter.com/wiObp3IeGl— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2018
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 14, 2018
#MNMForTN #TamilPride pic.twitter.com/vG9XY7VDrS
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 13, 2018
உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) April 14, 2018
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! pic.twitter.com/KKpuoJ89kg
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 13, 2018
இனிய #விளம்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். pic.twitter.com/gygBuCNbvE
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) April 14, 2018
எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழவேண்டும் என்று தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த 'விளம்பி' வருட தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.(2) pic.twitter.com/emW9x9mtqU
— Vijayakant (@iVijayakant) April 13, 2018
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் pic.twitter.com/NxFpUTcg8G
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 13, 2018
எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு வருடம் அனைவரது வாழ்விலும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்க எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். pic.twitter.com/PWkUEShuYx
— Amit Shah (@AmitShah) April 14, 2018
Puthandu Vazthukal
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2018