ட்வீட்டர்! வாழ்த்து மழையில் நனைந்த பாஜக தலைவர்கள்!

கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்!  

Last Updated : May 15, 2018, 12:24 PM IST
ட்வீட்டர்! வாழ்த்து மழையில் நனைந்த பாஜக தலைவர்கள்! title=

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், பாஜகா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் கர்நாடகாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை  தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்வீட்டர் பதிவில்...!

மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகி இருக்கும். மிகவும் வித்தியாசமாகி இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்..!

மே.18 இல் எனது நண்பர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்பார் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழிசை கூறும்போது...!

பிரதமர் மோடிக்கு கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வெற்றி சமர்ப்பணமாகும். 

காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள் என்றார். 

மேலும் அவர், ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது  என்று உறுது கூறினார்.

இது குறித்து  நிர்மலா சீதாராமன்,,,,,!

காங்கிரஸின் எதிர்மறை அரசியலை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர். பிரதமரின் பரப்புரையே பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்துள்ளது. 

வளர்ச்சியே நாட்டிற்கு முக்கியம் என்ற பிரதமரின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் கூறும்போது..!

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு வாழ்த்துகள் என்றார். 

மேலும் அவர், புதிதாக பொறுபேற்கும் பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை திறக்கவேண்டும் என்றார். 

Trending News