17:49 15-05-2018
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, காலை, 8:00 முதல் 40 மையங்களி வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெறுகிறது.
இதில், பா.ஜ., 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .29 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோன்று, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது.மதசார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.மற்ற கட்சிகள் இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி விட்டுத்தரவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, காங்கிரசுக்கு 20 அமைச்சர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 14 அமைச்சர்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, முதல்வராக குமாரசாமிக்கு பதவி ஏற்க உள்ளார்.
துணை முதல்வராக பாஜக உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளதையடுத்து, அதற்காக கர்நாடாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சித்தராமையா தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.
இது குறித்து தற்போது பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா..!
சித்தராமையா தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தோற்கடித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.