கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ், மஜத இடையே உடன்பாடு!

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள இடையே உடன்பாடு!!

Last Updated : Jun 1, 2018, 09:06 PM IST
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ், மஜத இடையே உடன்பாடு! title=

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள இடையே உடன்பாடு!!

கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அம்மாநில அமைச்சரவையில் எந்த கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, கர்நாடக அமைச்சரவையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 துறைகளும், காங்கிரஸ் கட்சிக்கு 22 துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரம், சுற்றுலா, கூட்டுறவு, போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இரு கட்சியின் அமைச்சர்களும் ஜூன் 6-ம் தேதி பதவி ஏற்கின்றனர். மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். 

நிதி, பொதுப்பணி, மின்சக்தி, கல்வி ஆகிய துறைகளில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறை, பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி, சுகாதாரம், வருவாய் துறைகள் ஆகியவை காங்கிரஸூக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News