ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்!
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையினை உண்டாக்கியது.
பின்னர் வீடியோ ஆதாரங்கள் மூலம் இந்த குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
Justin Langer has been confirmed as the new Head Coach of the Australian Men's Cricket Team https://t.co/glMGHTSmYz pic.twitter.com/3UHHG9zrNv
— Cricket Australia (@CAComms) May 2, 2018
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி நடத்திய விசாரணையில் துணை கேப்டன் டேவிட் வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும் திட்டத்துக்கு மூளையாக இருந்துள்ளார் என்று தெரிந்தது.
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பின் ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து லீமன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
லீமனின் ராஜினாமாவை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொருப்பினை ஜஸ்டின் லாங்கர் வகிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விரைவில் நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் லாங்கர் பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.