முகேஷ் அம்பானியின் Reliance Jio தனது அடிரடி சந்தை பயணத்தினை நிறுத்தும் பாடு இல்லை! தனது நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக தற்போது JioFi 4G LTE உடன் டெலிகாம் சந்தையில் தற்போது மீண்டும் களம் இறங்குகிறது Jio.
அதிவேக இணைய சேவை வழங்கும் வகையியினை ஹாட்ஸ்பாட் வசதி கொண்ட JioFi JMR815 டேட்டா கார்டினை தற்போது வெறும் ரூ.999-க்கு சந்தைப்படுத்தியுள்ளது Reliance.
இந்த JioFi JMR815 ஆனது ஒரே நேரத்தில் 32 சாதனங்களுக்கு அதிவேக இணைய சேவையினை வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருக்கும் JioFi-களை விட மிகவும் கைக்கடக்கமாக இந்த JioFi JMR815 வடிவமைக்கப் பட்டுள்ளது எனவும் Jio தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த JioFi JMR815 சிறப்பம்சங்கள்...
- 150Mbp தரவிறக்க வசதி
- 50Mbp பதிவேற்ற வசதி
- HD வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள்
- Jio4GVoice App மூலம் SMS அனுப்பும் வசதி
- ஆடியோ மற்றும் வீடியோ கான்ப்ரஸிங் கால் வசதி
- சம நேரத்தில் 32 சாதனங்களை இணைக்கும் வசதி
- 95 gram எடை மட்டும்
- 3000 mAh பேட்டரி