தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றது மகிழ்ச்சி!! நெகிழ்ச்சியில் துரைமுருகன்!!

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து பரிசு பெற்றார்!

Last Updated : May 29, 2018, 11:27 AM IST
தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றது மகிழ்ச்சி!! நெகிழ்ச்சியில் துரைமுருகன்!! title=

மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

இதையடுத்து, வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாவது இடம் பெற்ற ஐதராபாத் அணிக்கு 12.5 கோடி ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 

அப்போது நடந்த அணி நிர்வாகத்துக்கு வேண்டிய முக்கியஸ்தர்களை சந்திக்கும் விருந்தில் கலந்துகொண்ட திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தோனியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது கையெழுத்துடன் கூடிய சிஎஸ்கே டிசர்ட்டை துரைமுருகனுக்கு தோனி பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட துரைமுருகன், தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

Trending News