IPL_2018: மும்பை அணியை முறியடிக்குமா ராஜஸ்தான்!

இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் முடிவு செய்து உள்ளது.

Last Updated : Apr 22, 2018, 09:19 PM IST
IPL_2018: மும்பை அணியை முறியடிக்குமா ராஜஸ்தான்!  title=

கொல்கத்தா: ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் முடிவு செய்து உள்ளது.

11-வது ஐபிஎல் போட்டியின் 20-வது லீக் ஆட்டம் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரண்டாவது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 8 மணிக்கு துவங்கியது. இதில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன அணிகளும் மோதுகின்றனர். 

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை 4 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 7-வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

தற்போது, மும்பை அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டில் உள்ளது..! 

Trending News