IPL_2018: பஞ்சாப் அணிக்கு வைத்த இலக்கு மழையால் பாதிப்பு!!

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்கு வைத்த இலக்கு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது! 

Last Updated : Apr 21, 2018, 07:59 PM IST
IPL_2018: பஞ்சாப் அணிக்கு வைத்த இலக்கு மழையால் பாதிப்பு!! title=

கொல்கத்தா: ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடினர்.  அந்த அணியின் கிறிஸ் லின் 30 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார்.  அவர் 41 பந்துகளில் 74 (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

அந்த அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நரீன் 1 ரன்னில் வெளியேறினார்.  தொடர்ந்து உத்தப்பா (34), ராணா (3), கார்த்திக் (43), ரஸ்செல் (10), கர்ரான் (1) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சுப்மன் கில் (14) மற்றும் பியூஷ் சாவ்லா (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 192 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல் (49), லோகேஷ் ராகுல் (46) ரன்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது.

Trending News