#IPL-ல் சாம்பியன் பட்டம் வென்ற CSK இன்று சென்னை வருகை

மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது!

Last Updated : May 28, 2018, 11:01 AM IST
 #IPL-ல் சாம்பியன் பட்டம் வென்ற CSK இன்று சென்னை வருகை title=

மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. இதனையொட்டி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பேசிய சென்னை கேப்டன் தோனி...!

ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை கொண்டாட சென்னைக்கு செல்கிறோம். அங்கு சென்று ரசிகர்களையும் அணிக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க வேண்டும். பின்னர், விடுதி ஒன்றில் தங்கியிருந்து அனைவரும் ஒன்றிணைந்து மாலைப்பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்க இருக்கிறோம் என தோனி தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி, கோப்பையை வென்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Trending News