ஐபிஎல் 17_வது லீக்: 2 வருடங்களுக்கு பிறகு சென்னை vs ராஜஸ்தான் மோதல்!!

இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2018, 06:31 PM IST
ஐபிஎல் 17_வது லீக்: 2 வருடங்களுக்கு பிறகு சென்னை vs ராஜஸ்தான் மோதல்!! title=

கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 17_வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் மேட்ச் பிக்சிங் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி இரண்டு ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு கழித்து ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் முதல் முறையாக, இந்த சீசனில் மோத உள்ளது.

 

 

சென்னை அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இரண்டில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் 4_வது இடத்தில் உள்ளது.

அதேபோல ராஜஸ்தான் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் 5_வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சஞ்சு சாம்ஸன் மற்றும் அணியின் கேப்டன் ரஹானே நல்ல பார்மில் உள்ளனர்.

சென்னை அணியை பொருத்த வரை அணியின் கேப்டன் தோனி, ராயுடு மற்றும் சாம் பில்லிங்ஸ் நல்ல பார்மில் உள்ளனர். 

ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் நேருக்கு நேர் விளையாடியதில் சென்னை 11-ல் வெற்றியும், ராஜஸ்தான் 6-ல் வெற்றியும் பெற்றுள்ளது.

 

 

இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டு அணியும் மோதுவதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News