இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ள நிலையில் தற்போது மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் செல்போன்களுக்கு அனுமதி என தெரிவித்துள்ளது!
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, போராட்டம் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது, இதனால் தமிழக இளைஞர்களின் போராட்டம் திசை திருப்பப்படும் என ஐ.பி.எல்-க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மைதானத்தில் பேனர்கள் மற்றும் கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரசிகர்கள் அனைவரும் முறையான பரிசோதனை பெற்றே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேசியக்கொடிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்துகொள்ளக்கூடாது. செல்போன், பைகள், பட்டாசு, பைனாகுலர், கார் சாவிகள், கண்ணாடி பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து, யாரையும் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது எனவும் விதிகளை மீறி நடந்து கொண்டாலோ, மைதானத்தில் பொருட்களை வீசினாலோ கைது செய்யப்படுவர்" என சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு செல்போன் உபயோகிக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Match update: mobile phones will be allowed inside the stadium today. #Whistlepodu #CSKHomeComing #CSKvsKKR #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2018