I.O.C எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை மஹாராஷ்டிர மாநிலமான புனேயில் பறிசோதன முறை அடிப்படையில் துவக்கியுள்ளது.
சென்ற ஆண்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பெட்ரோல் பங்குகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
பெட்ரோல் தேவைப்படுவோரின் இடத்துக்கே சென்று, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் படி, டீசலை வாடிக்கையாளர்களின் வீட்டிற்க்கே சென்று விநியோகிக்கும் சேவையை மஹாராஷ்டிர மாநிலம் புனே-யில் இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று பரிசோதனை முறையில் துவக்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு என்றே டிஸ்பென்ஸர் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கர் லாரி ஒன்று வடிவமைத்துள்ளனர். இந்த புதியவகை வாகனத்தின் புகைப்படத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் புனேயில் இத்திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
Another milestone in customer convenience #FuelAtDoorstep. IndianOil launches FIRST OF ITS KIND PESO APPROVED Mobile dispenser for Door Delivery of Diesel to its esteemed customers at Pune. pic.twitter.com/7xB23at2Dj
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) March 16, 2018
இதன் வெற்றியைப் பொறுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு அமல் படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் டீசலுடன் பெட்ரோலும் விநியோகிக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.