இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் சனிக்கிழமையன்று திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதில் அந்த ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில பணியாற்றி வந்தவர் மிர் இத்ரீஸ் சுல்தான். தெற்கு காஷ்மீரில் சோபியானில் இருந்த இவர் ஒரு மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.
இந்நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடியதில் மிர் இத்ரீஸ் சுல்தான், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் நேற்று இணைந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருடன் உள்ளூரை சேர்ந்த 2 நபர்களும் அந்த அமைப்பில் இணைந்திருப்பதை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவில்லை. பயங்கரவாதி அமைப்பில் மிர் இத்ரீஸ் சுல்தான் இணைந்த தகவலை ராணுவம் வெளியிடவில்லை.
காஷ்மீரில் பணியாற்றி வந்த மிர் இத்ரீஸ் சுல்தான் ஜார்கண்ட் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் அதிருப்தி அடைந்த மிர் இத்ரீஸ் சுல்தான் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.