இந்தியாவின் முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான Zee Entertainment Enterprises Limited (ZEEL), தனை அனைத்து தொழில் துறை மற்றும் பிரிவுகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை மேலும் திறன்பட வழங்கும் முயற்சியில், இன்று ZEE பிராண்ட் ஒர்க்ஸ் ( ZEE Brand Works) அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, ZEE பிராண்ட் ஒர்க்ஸ் குழுவானது பிராண்டுகளுக்கு முழுமையான மற்றும் பரந்த அளவிலான பிராண்டிங், விற்பனையை அதிகரித்தல், வாடிக்கையாளர்களை ஈர்த்தல், புதிய அறிமுகங்கள், உள்ளடக்க உருவாக்கம், சேவைகளை ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து இந்திய சந்தைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்புகளில் ZEE நிறுவனத்தின் புகழ்பெற்ற தலைமை மற்றும் நிபுணத்துவத்தின் ஆதரவுடன், ZEE Brand Works ஆனது, 11 மொழிகளில் ZEE நிறுவனத்தின் டிவி சேனல்களின், OTT இயங்குதளமான ZEE5 மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் சரியான பார்வையாளர்களை அடைய, இணைக்க மற்றும் கவர, பிராண்ட்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கு மேம்பட்ட மற்றும் நேரடி அணுகலை வழங்குகிறது.
இந்த முயற்சி குறித்து குறிப்பிட்ட, ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைமை வளர்ச்சி அதிகாரி திரு. ஆஷிஷ் சேகல், “இந்திய மீடியா தளத்தில் ஒரு முன்னோடியாக, இந்திய பார்வையாளர்களின் நாடித் துடிப்பை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். இந்த மாபெரும் தேசத்திற்குள் இருக்கும் எண்ணற்ற மினி-பாரதம் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்க இது எங்களுக்கு உதவியது. நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் உணர்வுகள் மற்றும் மரபுகள் வெவ்வேறானவை . இந்திய நுகர்வோர் பற்றிய இந்த புரிதலை கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு சந்தைப்படுத்ட்தி, பிராண்ட் தீர்வுகளை உருவாக்குவது எப்போதுமே ZEE நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும்” என்றார்.
மேலும் அவர் மேலும் கூறுகையில், “மேம்பட்டு வரும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப பிராண்டுகளின் சந்தைப்படுத்தல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, ZEE பிராண்ட் ஒர்க்ஸ் தொடங்குவதன் மூலம் நாங்கள் எங்கள் சேவைகளை மேம்படுத்துகிறோம். இதன் மூலம், எங்கள் டிவி, டிஜிட்டல், சமூகம் குறித்த சிறந்த அனுபவ அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து தீர்வுகளை வழங்கும் மார்க்கெட்டிங் திறனை பயன்படுத்தி, குறிக்கோளை அடைய பிராண்டுகளை நாங்கள் செயல்படுத்துவோம். ஒரு தொழில்துறை முன்னணி முயற்சியாக, ZEE பிராண்ட் ஒர்க்ஸ், சிறந்த ஊடகத்தைப் பயன்படுத்தி சரியான பார்வையாளர்களை அடைய பிராண்டுகளுக்கு உதவும், இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுமொத்த ROI மதிப்பு அதிகரிக்கும்.
ZEE பிராண்ட் ஒர்க்ஸ் பற்றி, ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் வருவாய் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ராஜீவ் பக்ஷி கூறுகையில், “நுகர்வோர் அதிகளவில் நம்பகத்தன்மை, அவர்களின் ரசனை மற்றும் தேவைகளுக்கேற்ற வகையில் குறிக்கோள்களை கொண்ட பிராண்ட் சீரமைப்பு ஆகியவற்றுக்கு வெகுமதி அளிக்கின்றனர். ஒரு ஆழமான உணர்ச்சித் தொடர்பை உருவாக்குவதும், மனதளவில் ஈடுபாட்டை உருவாக்குவது, ஏற்கனவே உள்ள மற்றும் வளர்ந்து வரும் பிராண்டுகளுக்கு ஒரு முதன்மை சவாலாகும். ZEE Brand Works, HSM மற்றும் பிராந்திய சந்தைக் குழுக்களில் பிராண்டுகளின் மதிப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சியை மேலும் தீவிரமடையும். இந்த பயணத்தின் தொடக்கத்தில், ஒத்த எண்ணம் கொண்ட சந்தைப்படுத்துபவர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் வளர்ச்சி உத்திகளை அதிகரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குழுவின் தனித்துவமான படைப்பாற்றல் மற்றும் உள்ளார்ந்த நுகர்வோர் புரிதல் மூலம் இதனை சாதிப்போம்” என்றார்
ZEE பிராண்ட் ஒர்க்ஸ் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை பிராண்டுகளின் மாறுபட்ட குறிக்கோள்களுக்கு ஏற்ப பார்வையாளர்களை திறம்பட சென்றடையும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன:
- லீனியர் டிவி, OTT தளங்களில் ZEE நெட்வொர்க்கின் தனித்துவமான பிரபலத்தை பயன்படுத்தி, பிராண்டுகளுக்குத் தெரிவுநிலை, பிரம்மாண்டம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை வழங்கும் தயாரிப்புகளை வடிவமைத்தல்.
- வளர்ந்து வரும் புதிய யுக தொழில்முனைவோர் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்கள் சமூகத்திற்கான ஆக்கபூர்வமான தீர்வுகள், அவர்களின் முக்கிய வெற்றிகளை முன்னிலைப்படுத்துதல், வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்குவதில் அவர்களின் பயணங்களை விளக்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்துதல்.
- பிரபலமான டிவி ஸ்டார்கள் புதிய அவதாரங்கள், பிஹைண்ட் தி சீன்ஸ் மூலம் சின்னச் சின்னக் காட்சிகள் மற்றும் நேர்காணல்களுடன் மிக அருமையான நட்சத்திர நிகழ்ச்சிகள்
- குஸியோன் கே அவ்சார் என்னும் திருவிழாக்கள் தொடர்பான நிலழ்ச்சிகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் வரவிருக்கும் திருவிழாக் காலத்தைக் கொண்டாடலாம்.
Pedigree, டாபர் ஹனி ஃபிட்னஸ், அல்ட்ரா டெக் பாத் கர் கி போன்ற பிராண்டுகளை சிறப்பாக மேம்படுத்தி வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதில், ஏற்கனவே பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், GSK India, Pedigree, P&G, Ultra Tech Cement, Perfetti Van Melle, Philips India, Maruti Suzuki India Limited, Mankind Pharma, MTR Foods, Asian Paints, Swiggy ம்ற்றும் Amazon போன்ற பிராண்டுகளுடன் ZEE Brand Works பணியாற்றுகிறது
ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL):
Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் என்பது பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வழங்கும் முன்னணி உள்ளடக்க நிறுவனமாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து விரிந்துள்ள நிலையில், உலகெங்கிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைகிறது. பலதரப்பட்ட வகை, பல மொழிகள் மற்றும் ஒருங்கிணைந்த உள்ளடக்க தளங்களில் உள்ள மிகப்பெரிய உலகளாவிய மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ZEEL ஒன்றாகும்.
கூடுதல் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இ-மைல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்:
அனாசுவா மித்ரா: anasua.mitra@zee.com
கார்த்தி பெஹல்: kartik.behl@adfactorspr.com
பிரகார் குப்தா: prakhar.gupta@adfactorspr.com
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ