சோன்பத்ரா நிலத்தகராறில் 10 பேர் பலியானது துரதிர்ஷ்டவசமானது: யோகி ஆதித்யநாத்

சோன்பத்ரா கொலைக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை விட முடியாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் காட்டம்!!

Last Updated : Jul 19, 2019, 01:15 PM IST
சோன்பத்ரா நிலத்தகராறில் 10 பேர் பலியானது துரதிர்ஷ்டவசமானது: யோகி ஆதித்யநாத்  title=

சோன்பத்ரா கொலைக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை விட முடியாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் காட்டம்!!

சோன்பத்ராவில் நிலத்தகராறில் கடந்த 17ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சோன்பத்ராவில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பது "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் கொலையில் குற்றவாளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இருவர் குழுவை அமைத்து அதன் அறிக்கை நேற்று அரசிடம் சமர்பித்துள்ளதகவும் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே உத்தரப்பிரதேச காவல் இயக்குநர் ஜெனரல் ஓ.பி.சிங்குடன் விவாதித்ததாக ஆதித்யநாத் தெரிவித்தார்.

எனினும், 1955 ஆம் ஆண்டு முதல் அப்போதைய தெஹ்சில்தார் நிலங்களை மீறி ஒதுக்கியது. 1955 முதல் 1985 வரை, நிலம் ஆதர்ஷ் சொசைட்டிக்கு சொந்தமானது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து அது ஒரு தனிநபருக்கு வழங்கப்பட்டது.

“2017 ஆம் ஆண்டில், கிராமப் பிரதனுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்திலிருந்து அகற்றப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது, ”என்றார் ஆதித்யநாத்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கிராமத்தை நோக்கி சென்ற பிரியங்கா காந்தியை, 144 தடை உத்தரவு அமலில் இருபபதை கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா, சாலையில் அமர்ந்து ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை போலீசார் அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.

இதனிடையே தன்னை போலீசார் கைது செய்து வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறினார். ஆனால் பிரியங்காவை கைது செய்யவில்லை என்று உத்தரபிரதேச போலீசார் கூறியுள்ளனர். 

 

Trending News