காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதாக கூறி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதம் குறித்து பேசி வரும் தலைவர் யாசின் மாலிக்கின் கட்சியான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
சமீபத்தில் நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலை அடுத்து, பெரும்பாலான நாட்களில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அத்துடன் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரனை ஆணையம் சோதனைகளை நடத்தியது.
இந்நிலையில் தற்போது யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதாக கூறி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Yasin Malik renounced violence as a way of resolving J&K issue a long time ago. He was treated as a stakeholder in a dialogue initiated by then PM Vajpayee ji. What will a ban on his organisation achieve? Detrimental steps like these will only turn Kash into an open air prison.
— Mehbooba Mufti (@MehboobaMufti) March 22, 2019
இதற்கிடையில் “அமைதி வழியிலேயே போராட்டம் என்று அறிவித்த யாசின் மாலிக் இயக்கத்தின் மீது தடை ஏன்?” என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.