சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை சட்டசபையை புறக்கணிக்கப்போம்: பாஜக

அரசியலமைப்புக்கு உட்பட்டு மகாராஷ்டிரா சட்டசபைக்கு சபாநாயகரை நியமிக்கும் வரை, சட்டசபையை புறக்கணிப்போம் என்று மகாராஷ்டிரா பாஜக தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2019, 05:01 PM IST
சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை சட்டசபையை புறக்கணிக்கப்போம்: பாஜக title=

மும்பை: இன்று மகாராஷ்டிரா (Maharashtra) சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் (Floor Test) உத்தவ் தாக்கரே தலைமையிலான விகாஸ் அகாடி (Vikas Aghadi) அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபையில் 145 இடங்களின் பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில், 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா பாஜக (BJP)  எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு மேற்க்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியது.

சட்டமன்ற நடவடிக்கைகள் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் சலசலப்பு பெரும் ஏற்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முழக்கங்களால் சட்டசபை முடங்கியது. பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி எழுப்பினார். சலசலப்புக்கு மத்தியில், உத்தவ் தாக்கரே தற்காலிக அவைத் தலைவர் உத்தரவுக்குப் பின்னர், முதலில் அரசாங்க அமைச்சரவையில் பதவியேற்ற புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் சலசலப்பு தொடர்ந்தது. இதற்கிடையில், நம்பிக்கை தீர்மானம் மேற்க்கொள்ளப்பட்டதுத். இதன் பின்னர், சுனில் பிரபு, ஜெயந்த் பாட்டீல், என்சிபி தலைவர் நவாப் மாலிக் தவிர, மற்ற விசுவாச உறுப்பினர்கள் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தனர். இதன் பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பது சபையில் நடைபெறவிருந்தது, ஆனால் எதிர்க்கட்சி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினர்.

பாஜகவின் வெளிநடப்பைத் தொடர்ந்து, 172 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினர். சட்டசபையில் உறுப்பினர்களாக இல்லாத முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சர் சுபாஷ் தேசாய் ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. நம்பிக்கை தீர்மானத்தை பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் என மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியிருந்தார். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதை தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

பாஜகவின் மகாராஷ்டிரா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், இரகசிய வாக்கெடுப்புடன் சபாநாயகரை நியமித்த பின்னர் நம்பிக்கை தீர்மானம் நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்திருந்தார். மேலும் பேசிய அவர், “ஒரு சபாநாயகரை இரகசிய வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாரம்பரியம் மற்றும் நிர்ணய விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் ஒரு புரோட்டெம் பேச்சாளரின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்துகிறது எனக் கூறினார்.

சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை சட்டசபையை புறக்கணிக்கப் போவதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இதுக்குறித்து பேசிய முன்னால் முதலமைச்சர் ஃபட்னாவிஸ், “ஒரு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, நம்பிக்கை தீர்மானம் நடத்த முடியாது. என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை மறைத்து, சனிக்கிழமை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்தன. இது உச்ச நீதிமன்றத்தின் (Supreme court)  உத்தரவு மற்றும் அரசியலமைப்பை மீறுவதாகும். அரசியலமைப்பு பின்பற்றப்படும் வரை நாங்கள் சட்டசபையில் அமர மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News